ஏழைகளைக் குறிவைக்கும் வரி ஏய்ப்பு மாஃபியா! கூலித்தொழிலாளிக்கு வந்த ரூ.29 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்

ஏழைகளைக் குறிவைக்கும் வரி ஏய்ப்பு மாஃபியா! கூலித்தொழிலாளிக்கு வந்த ரூ.29 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்
News Image

வாணியம்பாடியில் கூலித்தொழிலாளிக்கு வந்த ரூ.29 கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு நோட்டீஸ் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கரிமாபாத் பகுதியைச் சேர்ந்தவர் இக்பால் முஸம்மில், இவர் தனியார் தோல் தொழிற்சாலையில் தினக்கூலி தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில்,  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள  ஜி.எஸ்.டி  வரித்துறை அலுவலகத்திலிருந்து இக்பால் முஸம்மிலுக்கு தபால் கடிதம் வந்துள்ளது. அதில், கடந்த 2022–2023 ஆண்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் "இக்பால் ட்ரேடர்ஸ்"  என்ற பெயரில் வணிக நிறுவனம் தொடங்கி செயல்பட்டு வந்ததாகவும், அந்த நிறுவனத்தின் மூலம் வணிகம் செய்து சுமார் ரூ.29 கோடிக்கும் அதிகமான ஜி.எஸ்.டி வரியை அரசுக்குச் செலுத்தாமல் ஏய்ப்பு செய்துள்ளதாகவும்

மேலும், அந்த வரி பாக்கியை உடனடியாகச் செலுத்த வேண்டும் என்றும் நோட்டீஸில் குறிப்பிட்டிருந்த நிலையில், இதனால் அவரது வங்கி கணக்கும் முடக்கி வைக்கப்பட்டிருப்பதால், சம்பள தொகை கூட எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஒருமுறை கூட சென்றிராத நிலையிலும், தனக்கு எந்தவித வணிக நிறுவனமும் இல்லாத சூழலிலும், தனது பெயரில் இவ்வளவு பெரிய தொகைக்கு வரி பாக்கி இருப்பதாக வந்த நோட்டீஸைக் கண்டு செய்வதறியாது திகைத்து, தனது ஆதார் அட்டை, பான் கார்டு உள்ளிட்ட தனிநபர் ஆவணங்களை யாரோ மர்ம நபர்கள் தவறாகப் பயன்படுத்தி, போலியாக 'இக்பால் ட்ரேடர்ஸ்' என்ற பெயரில் நிறுவனம் பதிவு செய்து இந்தஜி.எஸ்.டி முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாகவும், இதையடுத்து, இக்பால் முஸம்மில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அலுவலகத்தில்  புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

மேலும், கடந்த சில ஆண்டுகளாக, ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில், ஏழை கூலித்தொழிலாளிகளை குறிவைத்து, இதுபோன்ற மோசடி சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, ஏழை கூலித்தொழிலாளிகளின் ஆவணங்களை வைத்து மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks