அதிர வைக்கும் க்ரைம் ரேட்.. யார் இந்த சி.டி.மணி? இவருக்கு 200 கோடி சொத்தா?

அதிர வைக்கும் க்ரைம் ரேட்.. யார் இந்த சி.டி.மணி? இவருக்கு 200 கோடி சொத்தா?
News Image

சென்னை தேனாம்பேட்டை தாமஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன். 1990ம் ஆண்டு காலகட்டத்தில் தி.நகர், சைதாப்பேட்டை பகுதிகளிலுள்ள பிளாட்பாரங்களில் புதுப்பட சி.டி-க்களை விற்பனை செய்து வந்தார். ஆரம்பத்தில் திருட்டு சி.டி விற்பனை தொடர்பான தகராறு, செயின் பறிப்பு போன்ற சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்டு வந்தார். பின்னர் திண்டுக்கல் பாண்டியின் அறிமுகம் கிடைத்த பிறகு கொலை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். 2007-ல் தேனாம்பேட்டையில் நடந்த வெங்கடா கொலை, 2009-ல் கோயம்பேட்டில் வாழைத்தோப்பு சதீஷ் கொலை மற்றும் கே.கே.நகர் இரட்டை கொலை சம்பங்களை செய்தார்.

கேங் லீடர் சி.டி.மணி

இந்நிலையில் 2012-ம் ஆண்டு திண்டுக்கல் பாண்டி, அவனுடைய கூட்டாளியான கூடுவாஞ்சேரி வேலுவு ஆகியோர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.  இதனையடுத்து திண்டுக்கல் பாண்டியின் மறைவை அடுத்து சி.டி மணி கேங் லீடரானார். பின்னர் தொழிலதிபர்களை கடத்துவது, துப்பாக்கிமுனையில் மிரட்டி பணம் பறிப்பது, ரியல் எஸ்டேட் விவகாரங்களில் தலையிட்டு நன்றாக காசு பார்த்து வந்துள்ளார்.

கொலை செய்தவர்கள் லிஸ்ட்

தென்சென்னை தாதாவாக வலம்வந்த சி.டி மணி தலைநகர் சென்னையை தனது கண்ட்ரோலில் கொண்டு வருவதற்காக ரவுடி ராதா, வடசென்னை ரவுடி காக்கா தோப்பு பாலாஜி ஆகியோருடன் கைகோத்தான். இவர்களுடன் இணைந்து 2012-ல் கோட்டூர்புரத்தில், ‘ஆவி’ சுரேஷ், 2014-ல் சைதாப்பேட்டை அண்ணாமலை கொலை  உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டதை அடுத்து அவரது க்ரைம் ரேட் எகிறியது. அவ்வப்போது போலீசரால் சி.டி.மணி கைது செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: ப்ளீஸ் வேண்டாம்... விட்டுடுங்க பிரதீப்.. காதலியை விடாமல் கதறவிட்ட காதலன்.. இறுதியில் நடந்த பயங்கரம்

36 குற்ற வழக்குகள்..5 முறை குண்டர் சட்டம்

கடந்த 2020-ம் ஆண்டு நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு காக்கா தோப்பு பாலாஜியுடன் காரில் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது தேனாம்பேட்டை பட்டப்பகலில் இவர்கள் மீது எதிர் தரப்பு வெடிகுண்டு வீசியது. ஆனால், இதில் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அதன் பிறகு   தலைமறைவாக இருந்தபடியே கூட்டடாளிகள் மூலம் கொலை சம்பவங்களை அரங்கேற்றி வந்தார். பாதுகாப்புக்காக புல்லட் புரூப் பி.எம்.டபிள்யு கார், நவீனரக துப்பாக்கிகளை பயன்படுத்தி வந்தார்.  10 கொலை வழக்குகள் உள்பட 36 குற்ற வழக்குகள் உள்ளன. ஐந்து முறை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர். அவ்வப்போது கைது செய்யப்பட்டாலும் ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவாக இருந்துள்ளார்.

ரவுடி சி.டி.மணி கைது

இந்நிலையில் பிரபல ரவுடி சி.டி.மணியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். சேலத்தில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவலை அடுத்து தனிப்படை போலீசார் விரைந்தனர்.  இதனை எப்படியோ அறிந்த  சி.டி.மணி இசிஆரில் உள்ள வீட்டிற்கு சொகுசு காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் அருகே போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவரிடம் துப்பாக்கியை பறிமுதல் செய்து கைது செய்தனர். இவருக்கு 200 கோடி சொத்து இருப்பதாக கூறப்படுகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks