தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், புது துணி எடுப்பது, பட்டாசு வாங்குவது என பல செலவுகள் இருக்கின்றன. இந்த சூழலில் தற்போது பால் உள்ளிட்ட பல்வேறு மளிகை பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் செலவை எப்படி சமாளிப்பது என கவலை அடைந்துள்ளனர்.

தமிழக அரசு மக்களின் நலனை கருத்தில் கொண்டு பருப்பு உள்ளிட்ட 10 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பை வெறும் 200 ரூபாய்க்கு வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த மளிகை தொகுப்பு நாளை முதல் சென்னையில் உள்ள கூட்டுறவு அங்காடிகளில் விற்பனை செய்யப்படும். தீபாவளி பண்டிகை காலத்தில் அத்தியாவசிய மளிகை பொருட்கள், பொதுமக்களுக்கு மிக குறைந்த விலையில் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி மக்கள் கூட்டுறவு அங்காடிகளுக்கு சென்று 200 ரூபாய் செலுத்தினாலே போதும். பருப்பு முதல் புளி வரை 10 வகை பொருட்களை பெற்று கொள்ள முடியும். இந்த மளிகை தொகுப்பில் கடலை பருப்பு, பாசிப் பருப்பு, உளுந்தம்பருப்பு, மிளகாய், பூண்டு, புளி, கடுகு, சீரகம், சோம்பு ஆகியவை கிடைக்கும். இது நகரங்களில் வாழ் நடுத்தர மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

பொதுமக்கள் சாதாரணமாக கடைக்கு சென்று இந்த 10 மளிகை பொருட்களை வாங்கினால் அதன் மொத்த மதிப்பு, 200 ரூபாயை விட அதிகமாக இருக்கும். அந்த வகையில் பண்டிகை கால செலவை சமாளிக்க மானிய விலை மளிகை தொகுப்பு சென்னை மக்களுக்கு உதவியாக இருக்கும்.

தீபாவளி பண்டிகை முடியும் வரை கையிருப்பை பொறுத்து, மளிகை தொகுப்பு விநியோகம் செய்யப்படும் என சொல்லப்படுகிறது. மக்கள் கூட்டுறவு பல்பொருள் அங்காடிகள், கூட்டுறவு விற்பனை மையங்களுக்கு சென்று இவற்றை வாங்கலாம். ஒரு நபருக்கு ஒரு மளிகை தொகுப்பு என்ற அடிப்படையில் விநியோகிக்கப்படும். சிறப்பு மளிகை தொகுப்பை வாங்க ரேஷன் கார்டு அல்லது ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் எதுவும் கேட்கப்படாது. இவற்றை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள் என்பதால் தீபாவளி வரை காத்திருக்காமல் முன் கூட்டியே சென்று வாங்குவது நல்லது.

Source: Read Full Article