நவம்பர் மாதம் பிறக்க இன்னும் 4 நாட்களே உள்ளன. ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் சில முக்கியமான விதிகள் அமலுக்கு வரும். எல்பிஜி பயனர்களுக்கும் சில மாற்றங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை பேரல் ஒன்றுக்கு 117 டாலரை எட்டியுள்ளது. இதனால் இனிவரும் மாதத்தில் கேஸ் சிலிண்டர் விலை உயரும் வாய்ப்புள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ளது. இதன் தாக்கம் காரணமாக 19 கிலோ எடையுள்ள கமர்சியல் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட வாய்ப்பிருக்கிறது. வீட்டில் பயன்படுத்தப்படும் டொமெஸ்டிக் சிலிண்டர் விலையில் பெரிய மாற்றம் இருக்காது போல் தெரிகிறது. ஆனால் கடைசியாக ஜூன் 7-ம் தேதி அன்று டொமெஸ்டிக் சிலிண்டர்-இன் விலையும் மாற்றப்பட்டது.

அனால் கமர்சியல் சிலிண்டரைப் போல் சந்தை விலைக்கு ஏற்ப வீட்டில் பயன்படுத்தப்படும் சிலிண்டர் உயர்த்தப்படாது என்பதால் நவம்பர் மாதத்திலும் பழைய விலையே மாற்றமின்றி தொடர அதிக வாய்ப்புள்ளது. குழாய் மூலம் விநியோகிக்கப்படும் பிஎன்ஜி எரிவாயுவின் விலை பொதுவாக இறக்குமதி செய்யப்படும் LNG மற்றும் உள்நாட்டு உற்பத்தியை பொறுத்தது. கடந்த சில மாதங்களாக பிஎன்ஜி விலை சற்றே அதிகரித்துள்ளது. இருப்பினும் வழக்கமான எல்பிஜி சிலிண்டர் விலையை விட பிஎன்ஜி விலை குறைவுதான். நவம்பர் 1-ஆம் தேதி அன்று பிஎன்ஜி விலையில் என்ன மாற்றம் ஏற்படும்? என்பதை ஓஎம்சி நிறுவனங்கள் இனிவரும் நாட்களில் அறிவிக்கும். தற்போது சென்னையில் ஒரு யூனிட் 52 ரூபாயாக இருக்கிறது.

LPG பயனர்கள் பயோமெட்ரிக் அடிப்படையிலான e-KYC செயல்முறையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று ஆயில் மினிஸ்ட்ரி தெரிவித்திருக்கிறது. பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனர்கள் e-KYC செயல்முறையை முடிக்கவில்லை என்றால். சிலிண்டருக்கு அரசு வழங்கும் 200 முதல் 300 ரூபாய் வரையிலான மானியம் கிடைக்காது. அதேபோல e-KYC பூர்த்தி செய்யாதவர்கள் இருந்தாலும் உங்கள் கேஸ் டிஸ்ட்ரிபியூட்டரை அணுகி எளிதில் செய்து முடிக்கலாம் அல்லது நீங்கள் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டரின் அதிகாரப்பூர்வ ஆப்-பை ப்ளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்தும் வீட்டில் இருந்தே செய்து முடிக்கலாம்.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிய போர் பதற்றம் காரணமாக கேஸ் முன்பதிவு விதிகளில் சில மாற்றம் செய்யப்பட்டது. அந்த வகையில் 45 நாட்களுக்கு ஒரு முறை தான் கேஸ் முன்பதிவு செய்ய முடியும் என்ற விதி இருந்தது. ஆனால் இப்போது இந்த இடைவெளியை 45 நாட்களில் இருந்து 25 நாட்களாக ஓஎம்சி நிறுவனங்கள் குறைத்தது. இந்த விதி கிராமப்புற வாடிக்கையாளர்களுக்குப் பொருந்தும். நகர்ப்புற வாடிக்கையாளர்களாக இருந்தால் 25 நாட்கள் காத்திருக்க வேண்டும். இதற்கு முன்னர் வரை 21 நாட்களில் முன்பதிவு செய்யலாம் என்ற விதிமுறை இருந்தது. நவம்பர் மாதத்திலும் இதே விதிமுறைதான் கடைபிடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Read Full Article