16 வயது வளர்ப்பு மகளிடம் பாலியல் அத்துமீறல் – தாய் புகாரில் இரண்டாம் கணவர் போக்சோவில் கைது

16 வயது வளர்ப்பு மகளிடம் பாலியல் அத்துமீறல் – தாய் புகாரில் இரண்டாம் கணவர் போக்சோவில் கைது
News Image

"கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு"

திருப்பத்தூர் மாவட்டம் , வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் 38 வயதுடைய பெண் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் திருமணமாகி 16 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றுள்ளனர். விவகாரத்திற்கு பிறகு நிர்மலா தனது மகளுடன் புழல் பகுதியில் வீடு எடுத்து தங்கி வேலை செய்து வந்திருக்கிறார்.

அப்போது நிர்மலாவிற்கு அவரது வீட்டுக்கு அருகில் வசித்து வந்த திருவொற்றியூரை சேர்ந்த முரளி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முரளி நிர்மலாவை திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. பின்னர் நிர்மலா அவரது மகள் மற்றும் முரளி ஆகிய மூவரும் ஒரே வீட்டில் வசித்து வந்திருக்கின்றனர். முரளி தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த நிலையில் நிர்மலா கூலித் தொழில் செய்து வந்திருக்கிறார்.

"சிறுமியிடம் பாலியல் அத்து மீறல்"

நிர்மலாவின் 16 வயது மகள் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பள்ளி முடித்து வந்து வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். நிர்மலா வேலைக்கு சென்றிருந்த சூழலில் வீட்டிற்கு சென்ற முரளி தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார். மேலும் இதை வெளியில் சொன்னால் அடித்து வீட்டை விட்டு வெளியேற்றி விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த சிறுமி இந்த சம்பவம் வெளியில் சொல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட முரளி அடிக்கடி சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி உள்ளார். ஒரு கட்டத்தில் முரளியின் தொல்லை தாங்க முடியாது சிறுமி இது குறித்து அவரது தாயிடம் தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த நிர்மலா உடனடியாக இது குறித்து புழல் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். புகாரைப் பெற்றுக் கொண்ட மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இதுகுறித்து போக்சோ வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட முரளியை விசாரணை மேற்கொண்டு அவரை கைது செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks