தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்

தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர்  மோடி பேசியது என்ன? முழு விவரம்
News Image

முதல்வர் விஜயுடன் இணைந்து பணியாற்றுவோம் என்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசிடம் இருந்து தேவையான உதவிகள் கிடைக்கும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

பூந்தமல்லி - வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் சேவை திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் ரூ.13,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். முதலமைச்சர் விஜயும் சேர்ந்து திட்டத்தை தொடங்கி வைத்தார். நெடுஞ்சாலை, ரயில்வே, துறைமுகங்கள் சார்ந்த திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

சென்னை ஐஐடியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ரூ.3,700 கோடியிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள், சென்னை துறைமுகம், தூத்துக்குடி, வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் முக்கிய உட்கட்டமைப்பு திட்டங்கள் தொடங்கப்பட்டன. ‘அம்ரித் பாரத்’ ரயில் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களையும் பிரதமர் திறந்து வைத்தார்.

ரூ.13,000 கோடியில் திட்டங்கள்

பின்னர் நிகழ்ச்சியில், தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு வணக்கன் என்று தமிழில் உரையை தொடங்கிய பேசிய பிரதமர் மோடி, “தமிழ் வரலாற்றில் இன்று முக்கியமான நாள்; ரூ.13,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.  புதிய திட்டங்கள் மூலம் தமிழ் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். சென்னைக்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்; நவராத்திரி புனித காலம் தொடங்கும் நிலையில் தமிழ்நாட்டில் உள்ளேன். புண்ணிய பூமியான தமிழ்நாட்டில் இருந்து நவராத்திரி வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். சிவன், சக்தியின் புனித பூமி தமிழ்நாடு.

தமிழ்நாட்டில் இன்று தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்கள் தொழிற்துறையை வலுப்படுத்தும். புதிய சாலை, ரயில்வே திட்டங்கள் மூலம் மக்களின் போக்குவரத்து எளிதாகும். அறிவியல் மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சியால் இந்தியா உயர்கிறது. மாநிலங்களின் வளர்ச்சியில் தேசத்தின் வளர்ச்சி என்பதை உணர்ந்து வந்தவன் நான். பிரதமர் ஆனதும் மாநிலங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்தோம். அனைத்து மாநிலங்களின் இலக்குகளை எட்டவும் செயல்பட்டுள்ளேன்.

விஜயுடன் இணைந்து பணியாற்றுவோம்

குஜராத் முதல்வராக இருந்தபோது பல முறை கருணாநிதி, ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. பிரதமராக இருந்தபோதும் கருணாநிதி, ஜெயலலிதா, ஓபிஎஸ், இபிஎஸ், மு.க.ஸ்டாலினுடன் பணியாற்றினேன். முதலமைச்சர் விஜயுடன் இணைந்து தமிழக வளர்ச்சிக்கு பணியாற்றுவோம். சிறப்பான போக்குவரத்திற்கு நகரங்களின் கட்டமைப்பும் அவசியம்; நாடு முழுவதும் மெட்ரோ சேவையை விரிவாக்கி உள்ளோம். நாடு முழுவதும் 25 நகரங்களில் மெட்ரோ சேவைகள் உள்ளன. 2014 வரை 250 கிலோ மீட்டர் தூரம் இருந்த மெட்ரோ சேவை, 12 ஆண்டுகளில் 1,100 கிலோ மீட்டர் தூரம் தாண்டியுள்ளது. தமிழ்நாட்டின் நகர்ப்புற வளர்ச்சி எங்களுக்கு முதன்மையானதாகும். தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்கிறோம்.

செல்போன் உற்பத்தில் 2வது இடத்தில் இந்தியா

நாட்டின் மின்னணு ஏற்றுமதி பன்மடங்கு அதிரித்துள்ளது. செல்போன் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்யும் உலகின் இரண்டாவது பெரிய நாடாக மாறியிருக்கிறோம். உள்நாட்டு உற்பத்தி அதிகரித்ததால் உள்நாட்டில் லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். நாட்டில் உற்பத்தியை மேலும் பெருக்க சாலை, ரயில், துறைமுக வசதிகள் தேவைப்படுகின்றன. கப்பல் கட்டுமானத்தில் உலகளாவிய மையமாக மாறி பணியாற்றுகிறோம். ரூ.17,000 கோடியில் தூத்துக்குடி துறைமுகம் பசுமை எரிசக்தி மையமாக மாற்றப்பட்டுள்ளது. இந்திய துறைமுகங்களின் வேகம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளன. இந்தியாவின் பொருட்கள், முன்பைவிட வேகமாக உலக சந்தையை சென்றடைகின்றன. மீன் பிடி துறைமுகங்கள், மீன் பிடி மையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. சென்னை மீன்பிடித் துறைமுகங்கள் நவீனமயமாக்க மத்திய அரசு உதவி செய்யும். தமிழ்நாட்டில் கடற்பாசி உற்பத்திக்கும் மத்திய அரசு உதவுகிறது. கடந்தாண்டில் நாட்டின் கடல்சார் உணவின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசிடம் இருந்து தேவையான உதவிகள் கிடைக்கும்” என்று நன்றி கூறி பேச்சை முடித்தார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks