10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!

10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
News Image

தமிழக கோயில்களில் வழங்கப்படும் இலவச அன்னதான திட்டத்தில் பயன்பெறும் பக்தர்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக அதிகரிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது முதற்கட்டமாக 10 கோயில்களில் நடைமுறைக்கு வந்துள்ளது.

இலவச அன்னதான திட்டம்

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கோயில்களில் இலவச அன்னதானத் திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் ஏழை மக்கள் இந்த திட்டம் மூலம் பயன்பெற்று வருகின்றனர். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை, குறிப்பிட்ட நேரத்தில் அதேபோல் எத்தனை பேர் வந்தாலும் உணவு என்ற அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பக்தர்கள் தங்கள் குடும்பத்தினரின் நினைவு நாட்கள் அல்லது விசேஷ நாட்களில் நன்கொடை அளித்து ஒருநாள் அன்னதானத்தை நிறைவேற்றும் வசதியும், இனிப்பு, வாழைப்பழம் போன்ற உணவுகளை வழங்கவும் செய்யலாம்.

இந்த அன்னதான திட்டம் கடந்த 2002ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது. அப்போது மதிய நேரம் மட்டுமே உணவு வழங்கப்பட்டது. இந்த திட்டம் 2012ம் ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி பழனி மற்றும் ஸ்ரீரங்கம் கோயில்களில் நாள் முழுவதும் உணவு வழங்கப்பட்டது. இத்திட்டம் கடந்த திமுக ஆட்சியில் திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி, திருவண்ணாமலை மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டது. டோக்கன் அடிப்படையில் இந்த திட்டமானது அமலில் இருந்து வருகிறது.

பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த நிலையில் தினமும் கோயில்களின் நிலைப் பொறுத்து 100,150,200 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. இதனால் சில நேரங்களில் அன்னதானத்தை நம்பி வரும் பக்தர்களும், ஏழை மக்களும் ஏமாந்து போகும் நிலை ஏற்பட்டது. இந்த எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. தற்போது தமிழக வெற்றிக் கழக அரசு இந்த திட்டத்தை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து சென்றுள்ளது.

அதன்படி தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்   வழிகாட்டுதலின்படி,இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மற்றும்  வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு ஆகியோர் நேற்று  சட்டமன்றப் பேரவை அறிவிப்பை நிறைவேற்றும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம். குன்றத்தூர். அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாள்தோறும் நடைபெற்று வரும் அன்னதானத் திட்டத்தில் பயனாளிகளின் எண்ணிக்கையை விரிவுப்படுத்தி திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

அதன்படி முதற்கட்டமாக 10 திருக்கோயில்களில் நாள்தோறும் நடைபெறும் அன்னதானத் திட்டத்தில் பயனாளிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது.
கோயம்புத்தூரில் உள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோயில், பெரிய தடாகம் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோயில், வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில், திருப்பூரில் உள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில்,  காஞ்சிபுரத்தின் தேவராஜசுவாமி மற்றும் ஏகாம்பரநாதர் கோயில்கள், மற்றும் சென்னை சூலையில் உள்ள அங்காள பரமேஸ்வரி மற்றும் காசி விஸ்வநாத சுவாமி கோயில், குன்றத்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கொயில், ஈரோடு சென்னிமலை முருகன் கோயில், திருச்சி வயலூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆகியவற்றில் அன்னதான திட்ட பயனாளர்கள் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. பிற கோயில்களில் விரைவில் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும் என சொல்லப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks