<p style="text-align: justify;">தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் உள்ளிட்டவைகளை தருவதற்கு நூறு கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பெயரும் சேர்க்கப்பட்டு, அவர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். </p>
<p style="text-align: justify;"><em><strong>வழக்கை ரத்து செய்யக்கோரி மனு</strong></em></p>
<p style="text-align: justify;">ஏற்கனவே, இந்த வழக்கை ரத்துச் செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதில் அன்பில் மகேசை கைது செய்யக் கூடாது என உத்தரவிடுமாறு அவரது தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். ஆனால், நீதிபதி அன்பில் மகேஸ் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யக்கோரிய நிலையில் ,இன்று அந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது</p>
Source: Read Full Article