நாடு கடத்தப்பட்ட திபெத்திய முன்னாள் பிரதமர் லோப்சாங் சங்காய், சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் உடல்நிலை குறித்து திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். ஷி ஜின்பிங்கிற்கு இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியது, அவரது வாரிசு யார் என்பது குறித்து உலக அரசியலில் சூடான விவாதத்தைத் கிளப்பியுள்ளது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த சந்திப்பின்போது, ஒரு மூத்த சீன அதிகாரி தனக்கு இந்த தகவலை தெரிவித்ததாக லோப்சாங் சங்கய் கூறியுள்ளார்.

லோப்சாங் சங்காய் கூறியது என்ன.?

ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்தின் பாட்காஸ்ட் ஒன்றில், நாடு கடத்தப்பட்ட திபெத்திய முன்னாள் பிரதமர் லோப்சாங் சங்காய், ஒரு சீன அதிகாரியுடனான தனது சந்திப்பு குறித்த தகவல்களை பகிர்ந்துகொண்டார். 26-வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஷி ஜின்பிங் கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகருக்கு வந்தடைந்தார். அவர் விமானத்திலிருந்து இறங்கும் காணொளி ஒன்று வெளியாகி, அவரது உடல்நிலை குறித்த சந்தேகங்களைத் தூண்டியுள்ளது. இது தொடர்பாக லோப்சாங் சங்கய் கூறுகையில், "ஒரு மூத்த முன்னாள் சீன அதிகாரியுடன் பேச எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஷி ஜின்பிங்கிற்கு இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டதாக அவர் என்னிடம் கூறினார்," என்று தெரிவித்தார்.

On August 30, Xi Jinping arrived in Bishkek by special plane. Upon exiting the aircraft, Xi Jinping appeared severely swollen, pale, and unsteady on his feet, clearly lacking physical agility. He needed his wife, Peng Liyuan, to support him as he struggled to descend the aircraft… pic.twitter.com/AXBoeXxK1t

— Wanjun Xie (@xie_wanjun) August 30, 2026

ஷி ஜின்பிங் குறித்து பேசிய லோப்சாங் சங்காய், "அவருடைய பணி மிகவும் மன அழுத்தமானது. அவர் எவ்வளவு அழுத்தத்தில் இருக்கிறார் என்பதை அவரது முகம் காட்டுகிறது. அவரது நடையே எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறது. அவர் மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறார். அதனால்தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மனச்சோர்வு காரணமாக அவரால் முடிவெடுப்பதும் கடினமாகிறது. அதனால்தான் மூத்த ராணுவத் தளபதிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பல தளபதிகள் இங்கிருந்து காணாமல் போயுள்ளனர். பாதுகாப்பு அமைச்சரும் காணாமல் போயுள்ளார்," என்று கூறினார். இருப்பினும், ஷி ஜின்பிங்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டது என்ற அவரது கூற்றை ஆதரிக்க எந்த ஆதாரமும் இல்லை.

ஜின்பிங்கின் வாரிசு ஏன் அறிவிக்கப்படவில்லை.?

ஷி ஜின்பிங்கின் வாரிசு குறித்து லோப்சாங் சங்காயிடம் கேட்டபோது, அவரது வாரிசைத் தேர்ந்தெடுப்பது ஒரு சவாலான பணி என்று கூறியுள்ளார். புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் தலைவர், எதிர்காலத்தில் தனது அதிகாரத்திற்கு ஒரு போட்டியாளராகவோ அல்லது அச்சுறுத்தலாகவோ அமையக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், ஷி ஜின்பிங்கின் பதவி விலகலுக்குப் பிறகு, நாட்டில் குறிப்பிடத்தக்க நிச்சயமற்ற தன்மையும், அதிகாரத்திற்கான உட்கட்சிப் பூசல்களும் ஏற்படக்கூடும் என்றும் சங்காய் கூறினார்.

இதை விளக்கிய அவர், "வழக்கமாக, ஒரு பேரரசர் தனது பட்டத்து இளவரசரை நியமிப்பார். சீன வரலாற்றைப் பார்க்கும்போது, பட்டத்து இளவரசர் உங்களை கொலை செய்துவிட்டு உங்கள் இடத்தை பிடிப்பதற்கு உண்மையான சாத்தியக்கூறு உள்ளது. இங்கு, நீங்கள் ஒரு பட்டத்து இளவரசரை நியமிக்கவில்லை என்றால், நீண்ட காலம் ஆட்சி செய்ய முடியும். ஆனால், அது நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும். இது உள்நாட்டுப் போருக்கு வழிவகுக்கக்கூடும். மேலும், சீனாவிற்கு அத்தகைய வரலாறு உண்டு. இதனால்தான் ஷி ஜின்பிங் தனது வாரிசை அறிவிக்கவில்லை," என்று சங்காய் கூறியுள்ளார்.

Source: Read Full Article