Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!

Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!
News Image

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. 296 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் இந்திய அணி களமிறங்கி ஆடி வருகிறது. தொடக்க வீரர் ரோகித் சர்மா அதிரடியாக ஆடி 32 ரன்களுக்கு அவுட்டாக, மற்றொரு தொடக்க வீரரும், கேப்டனுமான சுப்மன் கில் மறுமுனையில் சதம் விளாசினார்.

கோலி சதம்:

இந்த போட்டியில் விராட் கோலி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் களமிறங்கியது முதலே வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை விராட் கோலி திறம்பட எதிர்கொண்டு ஆடினார். ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் விளாசி அதிரடியாகவே ஆடினார். அபாரமாக ஆடி அரைசதத்தை கடந்த விராட் கோலி 74 பந்துகளில் சதம் விளாசினார்.

The bat raise, the roar, the milestone 👏👏

A Virat Kohli show in Thiruvananthapuram 🍿

Updates ▶️ https://t.co/O2cs86p4gq#TeamIndia | #INDvWI | @mflone_ | @imVkohli pic.twitter.com/7pW58tYKeJ
— BCCI (@BCCI) September 27, 2026

86வது சதம்:

அவர் சதம் விளாசுவார் என்று ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாகவே விராட் கோலி சதம் விளாசி அசத்தினார். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இது அவருக்கு 55வது சதம் ஆகும். சர்வதேச அளவில் 86வது சதம் இதுவாகும்.

100 சாதனையை நோக்கி விராட் கோலி:

சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற்ற நிலையில், ஒருநாள் போட்டிகளில் மட்டுமே அவர் ஆடி வருகிறார். விராட் கோலி இந்த போட்டியில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். சர்வதேச அளவில் 100 சதங்களை விளாசிய ஒரே வீரர் என்ற பெருமையை சச்சின் டெண்டுல்கர் மட்டுமே தன் வசம் வைத்துள்ள நிலையில், விராட் கோலி அந்த சாதனையை முறியடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சர்வதேச அளவில் விராட் கோலி இன்னும் 30 முதல் 35 போட்டிகள் வரை விளையாடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். வரும் 2027 உலகக்கோப்பையே தன் கடைசி உலகக்கோப்பை என்று விராட் கோலி ஏற்கனவ அறிவித்துள்ள நிலையில், இன்று அவர் சதம் விளாசியிருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.

சேஸ் மாஸ்டர்:

விராட் கோலி தான் எப்போதும் சேஸ் மாஸ்டர் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த போட்டியை இறுதிவரை அவுட்டாகாமல் முடித்து வைத்தார். 88 பந்துகளில் 10 பவுண்டரி 9 சிக்ஸருடன் 139 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். 316 ஒருநாள் போட்டிகளில் ஆடும் விராட் கோலி இந்த போட்டி மூலமாக 15 ஆயிரம் ரன்களையும் கடந்தார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks