Virat -Anushka Hotel Order: விராட் கோலி - அனுஷ்கா சர்மாவின் ஒரே ஆர்டரால் கடனை அடைத்ததோடு, புதியதாக நான்கு கிளைகளை திறந்தும் டெல்லி ஓட்டர் உரிமையாளர் பற்றி கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

விராட் கோலி - அனுஷ்கா சர்மாவின் ஒரே ஆர்டர்:

சினிமா, விளையாட்டு போன்ற துறைகளை சார்ந்த நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் வெளியிடும் ஒவ்வொரு பதிவும் பெரும் பொருளாதார தாக்கங்களை கொண்டதாக விளங்குகிறது. அதற்கு உதாரணமாக தான், பிரபல தம்பதிகளான அனுஷ்கா ஷர்மா மற்றும் விராட் கோலியின் ஒரே ஒரு இன்ஸ்டாகிராம் பதிவு, நலிவடைந்த நிலையில் இருந்த மும்பை உணவகம் ஒன்றின் நிலையை முற்றிலுமாக மாற்றி, அதனை நிரந்தரமாக மூடும் விளிம்பிலிருந்து காப்பாற்றியது. அதோடு, அந்த வியாபாரத்தையே விரிவுபடுத்தவும் அந்த ஒரே ஒரு பதிவு உதவியுள்ளது.

கடன் நெருக்கடியில் இருந்த உணவம்:

சகோதரர்களான ஜஸ்பால் சிங் கல்சா மற்றும் மஹிந்தர் சிங் கல்சா ஆகியோர், மும்பை வாசிகளை உண்மையான வட இந்திய உணவுகளை சுவைக்க செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையுடன், கடந்த 2021 அக்டோபரில் செம்பூரில் 'டெல்லி சே' என்ற தங்களது உணவகத்தைத் தொடங்கினர். ஆனால் அந்த முயற்சி கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்தது. வெறும் 9 இருக்கைகளுடன் இயங்கி வந்த அந்தச் சிறிய உணவகம், 18 லட்சம் ரூபாய் கடனில் மூழ்கி, நிரந்தரமாக மூடப்படும் அபாயகரமான நிலைக்கு சிக்கி இருந்தது. இந்த நிலையில் தான் ஸ்டாண்ட்-அப் காமெடியன் அபிஷேக் உப்மன்யு அளித்த ஒரு தகவலின் காரணமாக அந்த உணவகத்தின் தலைவிதி யாரும் எதிர்பாராத விதமாக தலைகீழாக மாறியது. உப்மன்யு, அனுஷ்கா ஷர்மாவை அந்த இடத்திற்கு அறிமுகப்படுத்திய பிறகு, வட இந்திய உணவான சோலே பத்தூரேவை மிகவும் விரும்பி உட்கொள்ளும் தனது கணவரும் கிரிக்கெட் நட்சத்திரமுமான விராட் கோலிக்காக, அவர் அந்த உணவகத்தின் டெல்லி-ஸ்டைல் சோலே பத்தூரேயை ஆர்டர் செய்தார்.

அனுஷ்காவின் பதிவால் முடிந்த கடன் பிரச்னை

அந்த அசல் சுவையால் ஈர்க்கப்பட்ட அனுஷ்கா, இன்ஸ்டாகிராமில் அந்த உணவின் புகைப்படத்தைப் பகிர்ந்து, அதனை "ஏக்டம் டெல்லி-ஜைசே" (அசத்தலாக டெல்லி போல) என்று பாராட்டியதோடு, அந்த கடையை பரிந்துரைத்த அபிஷேக் உப்மன்யுவையும் டேக் செய்தார். இந்த பதிவு உடனடியாக சமூக வலைதளங்களில் வைரலானது. உணவுப் பிரியர்களும் ரசிகர்களும், பிரபலங்களால் அங்கீகரிக்கப்பட்ட சோலே பத்தூரேயைச் சுவைப்பதற்காக அந்த உணவகத்தை முற்றுகையிட்டனர். இதனால் வியாபாரம் சூடுபிடித்தது. வருமானமும் குவிய தொடங்கியது.

இதையும் படியுங்கள்: Kolathur Market: ஸ்டாலின் பார்த்து பார்த்து கட்டிய வர்த்தக மையத்திற்கு மூடு விழா..! ரூ.53 கோடி வீணா? வசதிகள் எங்கே?

விரிவடைந்த உணவக வியாபாரம்:

அதிகப்படியாக வாடிக்கையாளர் வருகை மற்றும் டெலிவரி ஆர்டர்களினால் வியாபாரம் அதிகரிக்க, கல்சா சகோதரர்கள் தங்களின் 18 லட்சம் ரூபாய் கடனை முழுமையாக அடைத்துள்ளனர். அதோடு ஆரம்பத்தில் வெறும் 9 இருக்கைகள் கொண்டு தொடங்கப்பட்ட அந்த உணவகம் தற்போது, நகரம் முழுவதும் 4 கிளைகளுடன் மிகவும் பிரபலமான ஒரு ப்ராண்டாக வளர்ந்துள்ளது. இது தினமும் 3,000-க்கும் மேற்பட்ட சோலே பத்தூரே தட்டுகளைப் பரிமாறுவதாகக் கூறப்படுகிறது. இதனால் நட்சத்திரங்களின் ஒவ்வொரு பதிவும் வியாபாரத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்த முடிகிறது என்பதை நம்மால் உணர முடிகிறது.

Source: Read Full Article