மேற்கு வங்க ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட யானைக் குட்டியை மீனவர்கள் போராடி மீட்டு தாயுடன் சேர்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் டீஸ்டா என்ற ஆறு ஓடுகிறது. அம்மாநிலத்தில் பிரதான நீர்தேவையை பூர்த்தி செய்யும் இந்த ஆற்றின் படுகைகளில் வனப்பகுதிகள் உள்ளன. இங்கு யானைகள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் இணையத்தில் வீடியோ ஒன்று வைரலானது. அதில் வெள்ள நீர் ஓடும் டீஸ்டா ஆற்றில் மீனவர்கள் சிலர் படகில் மீன் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது தூரத்தில் ஏதோ ஒரு உயிரினம் தண்ணீரில் தத்தளிப்பதையும், அது பயத்தில் சத்தம் போடுவதையும் கண்டனர்.

நிஜத்துல நடந்த 'Winnie the Pooh' கதை! 🥺❤️

டீஸ்டா ஆத்து வெள்ளத்துல அடிச்சிட்டுப் போன 3 நாள் குட்டியானையை, நம்ம வனத்துறையினரும் மக்களும் சேர்ந்து காப்பாத்தி பத்திரமா அதோட அம்மாக்கிட்டயே சேர்த்த நெகிழ்ச்சியான தருணம் இது.

கார்ட்டூன்ல குட்டி 'Heffalump'-அ தேடி வந்த தாய் யானை… pic.twitter.com/Ehs8i26Jwv

— Ganesh Kumar RK (@eraganeshkumar) September 22, 2026

உடனடியாக அந்த உயிரினம் இருந்த திசையை நோக்கி படகை செலுத்தி அருகில் சென்று பார்த்தபோது அது பிறந்து ஒரு மாதமே ஆன குட்டி யானை என தெரிய வந்தது. அதனை மீட்டு ஆசுவாசப்படுத்திய மீனவர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். டீஸ்டா ஆற்றில் கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் தூரம் யானைக் குட்டியைப் பின்தொடர்ந்து சென்று மீட்டுள்ளனர். இந்தச் சம்பவம் மால்பஜார் குடியிருப்புப் பகுதிக்கு அருகே நடைபெற்றுள்ளது. வெள்ளம் நீர் கரைபுரண்டோடும் பகுதியில் தங்கள் உயிரைப் பற்றியும் கவலைப்படாமல் மிது தாஸ், பிஸ்வநாத் தாஸ், ராஜேஷ் தாஸ், கோபால் தாஸ் மற்றும் பாப்லு தாஸ் ஆகிய 5 பேர் தான் இந்த துணிச்சலான சம்பவத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து தனது குட்டியை வெள்ள நீரில் தொலைத்த தாய் யானை சுற்றித் திரிவது பற்றி தகவல் கிடைத்தது. அந்த இடத்திற்கு குட்டியுடன் விரைந்த வனத்துறையினர் அதனை பாதுகாப்பாக தாயிடம் ஒப்படைத்தனர். இந்த காட்சிகள் காண்பவர்களை கண் கலங்க வைத்துள்ளது.

நேற்று காலை ஜல்பைகுரியில் உள்ள கஜோல்டோபா தடுப்பணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதைத் தொடர்ந்து டீஸ்டா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். சரியான நேரத்தில் குட்டியை காப்பாற்றிய மீனவர்களுக்கு வனத்துறையினர் மட்டுமின்றி அப்பகுதி மக்களும் நன்றி தெரிவித்துள்ளனர்.

கஜோல்டோபா வழியாக நிபானியா வனப்பகுதியில் இருந்த யானை கூட்டம் அருகே இந்த குட்டி விடப்பட்ட நிலையில் தாய் யானை சரியாக குட்டியை அடையாளம் கண்டு அணைத்துக் கொண்ட காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.

Source: Read Full Article