தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பு வகிக்கும் விஜய் நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கியவர். நடிகராக அவர் பல வெற்றிப்படங்களை அளித்து தமிழ்நாட்டில் தனக்கென கோடிக்கணக்கான ரசிகர்களை உருவாக்கிக் கொண்டார். இந்த திரையுலக புகழ் அவர் ஆட்சியைப் பிடிக்க உதவியது.

லண்டனில் சந்திக்கப்போகும் விஜய் - அஜித்:

திரையுலகில் அவரது நேரடி போட்டியாளராக கருதப்படுபவர் நடிகர் அஜித். இதனால், இணையத்தில் விஜய் அஜித் மோதல் மிகப்பெரிய அளவில் அவர்களின் படங்கள் வெளியாகும்போது நடக்கும். அரசியல் வருகைக்கு பிறகு விஜய் சினிமாவில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், அஜித்தும் கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது லண்டன் சென்றுள்ள விஜய் லண்டனில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வரும் நடிகரும், கார்பந்தய வீரருமான அஜித்தை நேரில் சந்திக்க உள்ளார்.

விஜய்க்காக மகிழ்ச்சி:

இதுதொடர்பாக, அஜித்குமார் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, சி.ஜோசப் விஜய் இங்கே வருவதற்கு நேரம் ஒதுக்கியுள்ளார். நாங்கள் திரையுலகில் 34 வருடங்கள் பணிபுரிந்துள்ளோம். அதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். தற்போது அவர் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அவர்கள் விளையாட்டை ஊக்கப்படுத்த ஏராளமான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். விளையாட்டு மட்டுமல்ல அவர்கள் இதற்காக உங்கள் ஆதரவையும் எதிர்பார்க்கிறார்கள். என்னுடைய நோக்கம் என்னவென்றால் இதுபோன்ற நிகழ்வுகள் இந்தியாவிற்கும் வர வேண்டும்.

இவ்வாறு அஜித் பேசியுள்ளார்.

எதிர்பார்ப்பு:

அஜித் அளித்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சட்டமன்றத்தில் சமீபத்தில் பேசிய விஜய் சென்னையில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்படும் என்று அறிவித்தார். விஜய்யின் இந்த அறிவிப்பிற்கு அஜித் பாராட்டு தெரிவித்திருந்தார். தேர்தல் பரப்புரையின்போது கரூரில் ஏற்பட்ட துயர சம்பவத்திலும் விஜய்க்கு ஆதரவான கருத்தையே அஜித் வெளிப்படுத்தியிருந்தார்.

திரையுலகில் விஜய்க்கு நிகரான கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட அஜித் அரசியலில் ஈடுபடும் தனக்கு இல்லை என்று ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்துள்ளார். ஆனாலும், அரசியல் தொடர்பான அவரது பேட்டிகள், கருத்துகள் தொடர்ந்து கவனிக்கப்பட்டே வருகிறது. விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவரும் விரைவில் லண்டனில் சந்திக்க உள்ள நிலையில், இந்த சந்திப்பு குறித்து இருவரது ரசிகர்களும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

அதேசமயம், இவர்கள் இருவரையும் விமர்சித்தும் சில தரப்பினர் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அஜித் விஜய்க்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று சிலர் அவரை விமர்சித்தும் வருகின்றனர்.

Source: Read Full Article