தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பு வகிப்பவர் முதலமைச்சர் விஜய். தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இவர் தற்போது லண்டனில் பயணம் மேற்கொண்டுள்ளார். லண்டனில் பயணம் மேற்கொண்டுள்ள விஜய் அங்கே சில்வர்ஸ்டோனில் நடிகரும், கார்பந்தய வீரருமான அஜித்குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்.

வெளியானது விஜய் - அஜித் சந்திப்பு வீடியோ:

மேலும் அஜித்குமார் விஜய்யை கட்டியணைத்து வரவேற்றார். தமிழ் திரையுலகின் இரு பெரும் துருவங்களாக திகழும் விஜய் - அஜித் இருவரும் ஒரே இடத்தில் இணைந்து இருப்பதை காண்பதற்காக லண்டனில் வசிக்கும் இருவரின் ரசிகர்களும் குவிந்தனர்.

தற்போது சில்வர்ஸ்டோனில் கார் பந்தயத்தை தொடங்கி வைத்த வீடியோவை விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சுமார் 2.53 நிமிடங்கள் உள்ள இந்த வீடியோவில் விஜய்யை அஜித் வரவேற்பது, இருவரும் ஒன்றாக கார் பந்தய காரில் சென்றது, விஜய் ரேசிங் காரை ஓட்டிப்பார்ப்பது, இருவரும் தேசிய கொடியுடன் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

ரசிகர்கள் கொண்டாட்டம்:

pic.twitter.com/M55AP6JJg2

— Vijay (@actorvijay) September 14, 2026

இந்த வீடியோவை இரு தரப்பினரின் ரசிகர்களும் பகிர்ந்து வருகின்றனர். திரையுலகில் இருவரும் சுமார் 30 ஆண்டுகளாக ஒருவருக்கு ஒருவர் போட்டியாளராக திகழ்ந்து வந்தனர். அப்போது இரு தரப்பு ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

திரையுலகில் இருவரும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளனர். இவர்களது படங்களும் ஒன்றாக திரையரங்கில் வெளியாகும்போது ரசிகர்கள் மோதல் சமூக வலைதளங்களில் உச்சகட்டத்தில் நடக்கும். தற்போது விஜய்யும் அரசியலுக்கு வந்ததால் ஜனநாயகன் படத்துடன் திரையுலகில் இருந்து விலகினார்.

வரவேற்பும், விமர்சனமும்:

அஜித்குமாரும் மிகவும் தீவிரமாக கார் பந்தயத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவரும் பெரியளவில் திரைப்படங்களில் ஒப்பந்தமாகவில்லை. தற்போது அவர் டேர்டெவில் எனும் திரைப்படத்தில் நடிக்கிறார். அந்த படத்தை அஜித்குமார் மனைவி ஷாலினியே தயாரிக்கிறார்.

விஜய் அஜித் சந்திப்பை ரசிகர்கள் கொண்டாடி வரும் அதேசமயத்தில், விஜய் தன் அரசியல் லாபத்திற்காக அஜித்தை சந்தித்துள்ளதாக சிலரும், இதே நட்பை திரைப்படங்களில் நடிக்கும்போது இருவரும் காட்டியிருக்கலாமே? என்றும் சிலர் விமர்சித்து வருகின்றனர்.

விஜய் இந்த கார்பந்தயத்தை தமிழக முதலமைச்சராக கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும், அவரும் தவெக கொடி வண்ணத்தில் ஜெர்சி அணிந்து கார் பந்தய காரில் அஜித்துடன் இணைந்து பயணித்தார்.

இவர்கள் இருவரையும் காண லண்டனில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் குவிந்தனர். வர்ணனையில் இந்திய சினிமாவின் பிராட்பிட் மற்றும் டாம் க்ரூஸ் என்று இருவரையும் வர்ணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article