Vanni Arasu: என் ஊருக்கே 80 வருஷமா பஸ் இல்ல.. வன்னி அரசு பிறந்த கிராமத்துக்கு முதல் முறையாக பஸ் சேவை!

Vanni Arasu: என் ஊருக்கே 80 வருஷமா பஸ் இல்ல.. வன்னி அரசு பிறந்த கிராமத்துக்கு முதல் முறையாக பஸ் சேவை!
News Image

தமிழ்நாடு அரசின் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு பிறந்த கிராமத்திற்கு சுதந்திரத்திற்கு பிறகு முதல்முறையாக பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நெகிழ்ச்சியுடன் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட அவர், “சுதந்திர இந்தியாவில் முதல் பேருந்து..  இந்தியா தனது 80வது சுதந்திர தினத்தை இந்த ஆண்டு கொண்டாடி, 81வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. நான் பிறந்த கிராமமான அயன்ரெட்டியபட்டிக்கு இன்று (13.09.26) தான் சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக அரசு பேருந்து வசதி கிடைத்துள்ளது.

எமது கிராமத்தின் சமூக நல்லிணக்கத்திற்கு அடையாளமாக, அனைத்து சமூக பெரியவர்களும், மக்களும் இணைந்து பூக்கள் தூவி, கொடி அசைத்து பேருந்தை வசதியை தொடங்கி வைத்தோம். இன்னுமொரு விடுதலை கிடைத்த உணர்வுடன் மக்கள் இதை கொண்டாடினர். "நம்ம ஊருக்கு நீ ஏதாச்சு செய்யணும்பா" என்று எமது அய்யாவும், அம்மாவும் எப்போதும் என்னிடம் சொல்வார்கள். அவர்கள் இருவரும் இல்லாத இந்த நாளில், எமது மக்கள் வெளிப்படுத்திய மகிழ்ச்சியே பெரும் ஆறுதலாக அமைந்தது. இன்று அவர்களது விருப்பத்தை நிறைவேற்றிய மகிழ்ச்சியுடன் ஊரிலிருந்து கிளம்பினேன்.

எமது கிராமத்துக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தந்த போக்குவரத்துத் துறை அமைச்சர்  விஜய் தமிழன் பார்த்திபன், இன்றைய நாளை சாத்தியமாக்கிய  தமிழ்நாடு முதலமைச்சர்  ஜோசப் விஜய்க்கும் எமது கிராம மக்களின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

எங்கே இருக்கிறது அயன்ரெட்டியப்பட்டி?

விருதுநகர் மாவட்டத்தில் மல்லாங்கிணறு பேரூராட்சிக்கு அருகில் அமைந்துள்ள அயன்ரெட்டியபட்டி கிராமம். இக்கிராமத்தில் வாழும் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தையே தங்களது முதன்மைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். இங்கு பட்டியலின சமூக மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் திமுக, அதிமுக என இரு கட்சிகள் மாறி மாறி ஆண்டு வந்தாலும் மக்கள் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்ல சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது. பேருந்து சேவையை தொடங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் வன்னி அரசு அமைச்சரான பிறகு அவரிடம் மக்கள் பேருந்து சேவை செய்து தர வேண்டுகோள் விடுத்தனர்.

தவெக ஆட்சி அமைந்த பிறகு தமிழ்நாடு முழுவதும் பேருந்து தடம் பதியாத ஊருக்கு கூட பஸ்கள் இயக்கப்படுகிறது. அப்படியான அயன்ரெட்டியபட்டி கிராமத்துக்கும் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதேசமயம் இத்தனை ஆண்டுகளாக தமிழ்நாட்டை ஆண்ட திமுக, அதிமுக கட்சிகளால் ஏன் இப்படி ஒரு நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என சமூக வலைத்தளங்களில் கேள்வியெழுப்பி வருகின்றனர். அமைச்சர் வன்னி அரசு ஒரு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் இதுபோன்ற மக்கள் முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks