உக்ரைன், ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி, ரஷ்யா மீது தனது வரலாற்றிலேயே மிகப்பெரிய தாக்குதலைத் தொடுத்துள்ளது. அல் ஜசீராவின் தகவல்படி, ரஷ்யாவின் நாடாளுமன்றத் தேர்தலின் இறுதி நாளில், தலைநகர் உட்பட மாஸ்கோ பிராந்தியத்தின் மீது உக்ரைன் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதல்களில், குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டதோடு, ஒரு முக்கிய சுத்திகரிப்பு நிலையமும் சேதமடைந்துள்ளது. 1,600-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் இடைமறிக்கப்பட்டதாகவும், அவற்றில் 450 விமானங்கள் தலைநகரை நோக்கி சென்றுகொண்டிருந்ததாகவும் மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, கீவ் மீது ரஷ்யா நடத்திய இரவு நேரத் தாக்குதல்களில், மூன்று குழந்தைகள் உட்பட குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவும் உக்ரேனும் ஒன்றுக்கொன்று எதிரான தொலைதூரத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வரும் வேளையில், இந்த தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.

தாக்குதல்கள் குறித்து மாஸ்கோ ஆளுநர் கூறியது என்ன.?

மாஸ்கோ ஆளுநர் ஆண்ட்ரி வொரோபியோவ், சமூக ஊடகப் பதிவு ஒன்றில், இந்த தாக்குதலைத் தான் கண்டதிலேயே மிகப்பெரியது என்று கூறியுள்ளார். உக்ரைனில் நடந்த இரண்டு தனித்தனித் தாக்குதல்களில் 44 வயது பெண் ஒருவரும், ஒரு முதியவரும் கொல்லப்பட்டதாக அவர் கூறினார். 21 மாடி கட்டிடம் மீது ட்ரோன் மோதியதால் ஏற்பட்ட தீ காரணமாக, 400 பேர் வெளியேற்றப்பட்டதாக வொரோபியோவ் தெரிவித்தார். இந்த தாக்குதல்களின் போது, மாஸ்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள ஒரு கட்டிடம் சேதமடைந்தது. அவசரகால சேவைகள் சம்பவ இடத்தில் உள்ளன.

மேலும், இந்த முக்கிய சுத்திகரிப்பு ஆலை கடந்த சில மாதங்களாக உக்ரேனியத் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள மூன்று நாள் தேர்தலில் தலையிட உக்ரைன் முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். இந்த முன்னெப்போதும் இல்லாத தாக்குதல், தேர்தல்களை சீர்குலைக்கும் நோக்கத்துடன் தெளிவாக நடத்தப்பட்டது என்று அவர் டெலிகிராமில் குறிப்பிட்டார்.

தாக்குதல்களை பாராட்டிய ஜெலன்ஸ்கி

உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி, இந்த தாக்குதல்களை பாராட்டினார். அது குறித்து தெரிவித்த அவர், "மாஸ்கோ பகுதியில் நேற்று இரவு நாங்கள் நடத்திய தொலைதூரத் தாக்குதல்கள், குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன," என்று கூறினார். மேலும், "முக்கியமான ரஷ்ய எண்ணெய் ஆலைகளும், தாக்குதல் நடத்தியவர்களின் தளவாட மையமும் தாக்கப்பட்டன. இவை பல பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்கள். அவைதான் போர் இயந்திரத்திற்கு ஆற்றலை அளிக்கின்றன," என்றும் அவர் கூறினார்.

இந்தத் தாக்குதல் தொடர்பாக, உக்ரைனின் ரஷ்ய ஆக்கிரமிப்பு கெர்சன் பகுதியில், பொதுமக்கள் பேருந்து மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாக ரஷ்யாவின் மத்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் கூறியதாக, ரியா நோவோஸ்தி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் ஒரு தேர்தல் அதிகாரியும் அடங்குவார். போர் தொடங்கியதிலிருந்து ரஷ்யா மீது ஒரே நாளில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல்களில் இதுவும் ஒன்று என ஒரு செய்தியாளரை மேற்கோள் காட்டி அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

Source: Read Full Article