Udhayanithi:"மாணவர் பாரதிதாசனை பழிவாங்குவதை ஏற்க முடியாது.. கேவலத்தின் உச்சம்" - தவெக அரசை எச்சரித்த உதயநிதி

Udhayanithi:"மாணவர் பாரதிதாசனை பழிவாங்குவதை ஏற்க முடியாது.. கேவலத்தின் உச்சம்" - தவெக அரசை எச்சரித்த உதயநிதி
News Image

தமிழக அரசின் நிதி உதவியுடன் வெளிநாடுகளின் பல்வேறு கல்வி நிலையங்களில் தமிழக மாணவர்கள் பயின்று வருகின்றனர். அதுபோல, மலேசியாவில் படித்து வரும் மாணவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாரதிதாசன். தவெக ஆட்சி அமைந்த பிறகு தனக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகை தற்போது மறுக்கப்பட்டுள்ளதாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வீடியோ வெளியிட்டிருந்தார்.

கண்ணீர்மல்க வீடியோ:

இந்த நிலையில், தமிழக அரசிடம் இருந்து தனக்கு உதவித்தொகை தற்போது வரை கிடைக்காததால் தன்னுடைய கல்வியே பாதிக்கப்படும் சூழல் உருவாகலாம் என்றும், கல்லூரியில் இருந்து நீக்கப்படும் அபாயம் உருவாகியிருப்பதாகவும் அவர் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது,

மலேசியாவில் படிக்கும் மாணவர்:

அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன், இந்த அரசு தனக்கான கல்வி உதவித்தொகையை வழங்காமல் இழுத்தடித்ததை சுட்டிக்காட்டி இருந்த நிலையில், தற்போது இந்த ஆட்சியாளர்கள் அவருடைய கல்வியையே…
— Udhay (@Udhaystalin) September 17, 2026

அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன், இந்த அரசு தனக்கான கல்வி உதவித்தொகையை வழங்காமல் இழுத்தடித்ததை சுட்டிக்காட்டி இருந்த நிலையில், தற்போது இந்த ஆட்சியாளர்கள் அவருடைய கல்வியையே கேள்விக்குறியாக்குவதாக கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.

கேவலத்தின் உச்சம்:

பெரியார் பிறந்த #சமூகநீதி நாளில் இப்படி ஒரு சமூக அநீதியை அரங்கேற்றி இருக்கும் #SofaModel அரசை வன்மையாக கண்டிக்கிறேன். தன்னுடைய தவறை மறைக்க அடுத்தவர் மீது பழிபோடும் இந்த ஆட்சியாளர்கள், அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வரவில்லை என்று சொன்ன மாணவரை குறிவைத்து நெருக்கடி  தருவதும், கல்வியில் இருந்து வெளியேற்ற துடிப்பதும் கேவலத்தின் உச்சம்.

ஏற்க முடியாது:

மாணவர் பாரதிதாசனை பழிவாங்க, அவருடைய கல்வியை பாழாக்கும் வேலையில் இந்த அரசு இறங்கி இருப்பது ஏற்க முடியாது. ரோஹித் வெமுலாவுக்கு நடந்த அதே கொடுமையை இந்த அரசு தனக்கு செய்கிறது என்று மனம் நொந்து பேசியிருக்கும் பாரதிதாசனின் கல்விக்கு எந்த இடையூறும் இந்த அரசு செய்யக்கூடாது.

அவருக்கு சேர வேண்டிய கல்வி உதவித்தொகை கிடைக்கவும் - அவரது ஆராய்ச்சி படிப்பு தொடரவும் இந்த ரீல்ஸ் அரசு துணை நிற்க வேண்டும்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks