Tamil Nadu Power Shutdown: தமிழ்நாட்டில் நாளை (செப்டம்பர் 18 ஆம் தேதி) எந்தெந்த மாவட்டங்களில் மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பை மின்சாரம் வாரியம் வெளியிட்டுள்ளது.

மாதாந்திர பராமரிப்புப் பணிகள்

தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், தமிழ்நாட்டில் நாளை காலை 9 மணி முதல் பல்வேறு மாவட்டங்களில் மின் தடை செய்யப்படவுள்ளது.

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

உடுமலைப்பேட்டை பகுதிகள்

எஸ்.எஸ்.கிழவன்கட்டூர் துணை மின் நிலையம்

கிழவன்காட்டூர், எலியமுத்தூர், பெரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமேடு, மானுப்பட்டி, கொமரலிங்கம், அமராவதிநகர், கோவிந்தபுரம், அமராவதி சோதனைச் சாவடி, பேரம்பள்ளம், தும்பளப்பட்டி, குருவப்பநாயக்கனூர், ஆலாம்பாள்.

தஞ்சாவூர் மாவட்டம்

பட்டுக்கோட்டை, ஆலடிக்குமுலை.

பெரம்பலூர் மாவட்டம்

கூத்தூர் துணை மின் நிலையம்

அல்லிநகரம், இண்டஸ்ட்ரியல், பிலிமிசை, வெண்மணி, டால்மியா, அரியலூர், கூடலூர்.

கீழப்பாலூர் துணை மின் நிலையம்,

கீழப்பலூர், பொய்யூர் நீர்நிலைகள், கொக்குடி

வெண்மணி துணை மின் நிலையம்

மேலமாத்தூர், வெண்மணி, நல்லறிக்கை, புது குடிசை

கூடலூர் எஸ்.எஸ் துணை மின் நிலையம்

குளத்தூர், சிலக்குடி, திம்மூர்

மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை

மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.

பாதுகாப்பாக சமாளிக்க முடியும்

மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.

Source: Read Full Article