Udhayanidhi Stalin on CM Vijay: மிசா மற்றும் சர்க்காரிய கமிஷன் பற்றி பேச முதலமைச்சர் விஜய்க்கு தகுதியில்லை என, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சாடியுள்ளார்.

பொய்களை அடுக்கிய CM விஜய் - உதயநிதி

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அளித்த பதிலுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள், வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் , “மடைமாற்றம் செய்யாமல் சட்ட-ஒழுங்கு தொடர்பாக நேரடியாக பதிலளிக்க வேண்டும் என முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பி இருந்தேன். அதற்கு பதிலளித்து கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் பேசியிருந்தார். சட்ட ஒழுங்கு தொடர்பாக எடுத்த நடவடிக்கைகளை எல்லாம் பட்டியலிட்டு வந்தார். நாங்கள் எல்லாம் அதை அமைதியாக கேட்டு வந்தோம். 15 நிமிடங்களுக்குப் பிறகு எந்தவித ஆதாரங்களும் இல்லத குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். திமுக ஆட்சி நடக்கிறது என்ற நினைப்பில், முதலமைச்சர் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். திமுக உறுப்பினர்கள் சிலர் வெளி நிகழ்ச்சிகளில் பேசியதை அவையில் பேசுகிறார். இதுகுறித்து பதிலளிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும் என சபாநாயகரிடம் கோரினோம். வாய்ப்பு மறுக்கப்பட்டது. தொடர்ந்து பல தவறான பொய்யான குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இதற்கு பதிலளிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டது. ஒருவழியாக அமைதி கொடுத்தார். ஆனால் யாரோ சிலரின் அழுத்தத்தால் வாய்ப்பு மீண்டும் மறுக்கப்பட்டதால் வெளிநடப்பு செய்தோம்.

ரீல்ஸ்க்காக மட்டுமே பதிலுரை

எங்களது கேள்விகள் எதற்குமே முதலமைச்சர் பதிலளிக்கவில்லை. வியாழக்கிழமை சொன்னதைபோல மூன்று நாட்கள் அவகாசம் இருப்பதால் எதையாவது தயார் செய்வது வருவார் என எதிர்பார்த்தோம். ஆனால், அன்று எப்படி ஓட்டப்பந்தயத்தில் ஓடினாரோ அதே பாணியில் இன்று, ஒப்புவித்தல் போட்டியை போன்று மனப்பாடம் செய்து பேசினார். அதே பஞ்ச் டயலாக் சினிமா வசனங்கள் என ரீல்ஸ்க்காக மட்டுமே முதலமைச்சர் இந்த உரையை நிகழ்த்தி இருக்கிறார். தவெகவினர் ஈடுபட்ட பல குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டே கேள்வி எழுப்பினோம். அதற்கெல்லாம் பதிலளிக்காமள், 1970ம் ஆண்டிற்கு போய்விட்டார்.

”கொடநாட்டில் வாட்ச்மேன் வேலை”

சர்க்காரியா கமிஷன், மிஷா பற்றி எல்லாம் பேசுகிறார். இதற்கெல்லாம் அவருக்கு தகுதி இருக்கா? யாரோ எழுதி கொடுத்ததை மனப்பாடம் செய்து இங்கு வந்து வாந்தி எடுத்து இருக்கிறார். எந்த தவறும் நடக்கவில்லை என சர்க்காரியா கமிஷனே அறிக்கை வழங்கியுள்ளது. மிசாவை பற்றி இவர் பேசுகிறார். கொடநாட்டில் தனது படத்திற்காக வாட்ச்மேன் வேலை பார்த்தவர் எல்லாம், எங்கள் தலைவரை பற்றி பேசலாமா? இவர் அரசியலுக்கு வந்ததும் ஆட்சியை பிடித்ததுமே ஒரு விபத்து தான். ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்.

இதையும் படியுங்கள்: CM Vijay Speech: "ஃப்ராடு, கரூர் கேங், ABUSE" திமுகவை வெளுத்து வாங்கிய விஜய் - வேடிக்கை பார்த்த உதயநிதி ஸ்டாலின்

Source: Read Full Article