சிறுமிகளை சீரழித்த ஜெம் வீரமணிக்கு எதிரான விவகாரம் தமிழ்நாட்டில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் திமுக-வினர் யாரும் இதுவரை கருத்து தெரிவிக்காததற்கு பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். திமுக மட்டுமின்றி அதிமுக தலைவர்களும் எந்த கேள்வியும் இதுவரை இந்த விவகாரத்தில் எழுப்பவில்லை.

தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது. இந்த நிலையில், இந்த விவகாரத்தில் தவெக திமுக-வை கண்டித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

மெளனம் ஏன்?

"வீரமணி POCSO வழக்கில் கொத்தடிமைகளின் பண்ணையார் கள்ளமௌனம் காப்பது ஏன்? 2025 அக்டோபரில் வீரமணி மீது POCSO வழக்கு பதிவு செய்யப்பட்டு, 2026 பிப்ரவரியில், அதாவது 5 மாதங்களுக்குள், காவல்துறை வழக்கை முடிக்கப் பார்த்ததை, காவல்துறையைத் தன் கட்டுக்குள் வைத்திருந்தவர் அறிவாரா? இரும்புக்கரம் இற்றுப்போய் இருந்ததா?

பொள்ளாச்சி வழக்கிற்குப் பொங்கிய கொத்தடிமைகளும், அவர்களின் பண்ணையாரும் இப்போது அமைதி காப்பது ஏன்? மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் சென்ற அண்ணனும் தங்கையும் கமுக்கமாக இருப்பது ஏன்? அப்போது பொங்கியது தேர்தல் ஆதாயத்திற்காகவா?

வீரமணி POCSO வழக்கில் கொத்தடிமைகளின் பண்ணையார் கள்ளமௌனம் காப்பது ஏன்?

2025 அக்டோபரில் வீரமணி மீது POCSO வழக்கு பதிவு செய்யப்பட்டு, 2026 பிப்ரவரியில், அதாவது 5 மாதங்களுக்குள், காவல்துறை வழக்கை முடிக்கப் பார்த்ததை, காவல்துறையைத் தன் கட்டுக்குள் வைத்திருந்தவர் அறிவாரா?…

— TVK IT Wing Official (@TVKHQITWingOffl) September 21, 2026

வாய் திறக்க மறுப்பது ஏன்?

யார் இவ்வழக்கை முடிக்கச் சொல்லி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது? பாட்டியைப் பிடிக்கத் தனிப்படை அமைத்த பண்ணையார், இவ்வழக்கைப் பற்றி வாய் திறக்க மறுப்பது ஏன்?
உரிமைக்காக போராடிய தூய்மைப் பணியாளர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், விவசாயிகள் மீது காவல்துறையை ஏவல்துறையாக்கி அதிகார அத்துமீறல் செய்தவருக்கு, வீரமணி வழக்கின் விசாரணையை முடுக்கிவிட வக்கில்லையா?

போலி அப்பாவிற்கு அக்கறையில்லயா?

“அனைவரும் தன்னை அப்பா என்று அழைக்கிறார்கள்” என்று ஷூட்டிங் நடத்தி அப்பா திணிப்பு செய்த போலி அப்பாவிற்கு, பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகள் என்று தெரியாதா? அல்லது அக்கறையில்லையா?

சட்டம் ஒழுங்கைக் காக்கும் துறையை கையில் வைத்திருந்தவர், யாரைக் காப்பாற்ற வாயை மூடிக் கொண்டிருக்கிறார்? குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறதோ? அப்பா என்று தன்னை முன்னிறுத்திக் கொண்டவரின் ஆட்சியில் முடிக்கப் பார்த்ததாகக் கூறப்படும் வழக்கை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார் தமிழகத் தங்கைகளின் அண்ணன், வெற்றித் தலைவர்!

கதிகலங்குவது உறுதி:

மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் தீர்ப்பு, கள்ளமௌனம் காப்பவர்களைக் கதிகலங்கச் செய்யப் போவது உறுதி."

இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.

Source: Read Full Article