திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சொந்தமான ரூபாய் 50 கோடி மதிப்பிலான நிலத்தை ஆக்கிரமித்த வழக்கில் திமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு:

இந்த விவகாரம் தொடர்பாக பேட்டி அளித்த அமைச்சர் ரமேஷ் தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கோயில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதோ, அந்த புகார்களை மக்கள் அளித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக தவெக ஐடி விங் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

பெருமாளுக்கே நாமம்:

பெருமாளுக்கே பட்டை நாமம் சாத்திய பவளவிழா பாப்பா! “ஊரை அடித்து உலையில் போடுவது” என்று பழமொழி சொல்வார்கள். இங்கு கோவில் நிலத்தைச் சுருட்டி, தனது பாக்கெட்டில் போட்டுள்ளது பவளவிழா பாப்பாவான தி.மு.க.

ஊழலின் ஊற்றுக்கண்ணாய் விளங்கும் உத்தம திமுகவின் பகுதிச் செயலாளர், ஸ்ரீரங்கம் கோவில் நிலத்தின் மூலப்பத்திரம் காணாமல் போய்விட்டது என்ற கட்டுமரக் கதையைக் கட்டி, பெருமாளுக்கே நாமத்தைப் போட்டு, தனது பெயரில் மாற்றியுள்ளார்.

பெருமாளுக்கே பட்டை நாமம் சாத்திய பவளவிழா பாப்பா!

“ஊரை அடித்து உலையில் போடுவது” என்று பழமொழி சொல்வார்கள். இங்கு கோவில் நிலத்தைச் சுருட்டி, தனது பாக்கெட்டில் போட்டுள்ளது பவளவிழா பாபாவான தி.மு.க.

ஊழலின் ஊற்றுக்கண்ணாய் விளங்கும் உத்தம திமுகவின் பகுதிச் செயலாளர், ஸ்ரீரங்கம் கோவில்… pic.twitter.com/W1rBxBkJ1r

— TVK IT Wing Official (@TVKHQITWingOffl) September 19, 2026

கோயில் நிலம் அபகரிப்பு:

விஞ்ஞான ஊழல் செய்யும் வித்தையை விழுதுகளுக்கும் விழுந்து விழுந்து கற்றுத் தந்ததன் விளைவு, கோவில் நிலம் அபகரிப்பு வரை வந்துள்ளது.

அறநிலையத் துறையில் எத்தனை அறிவிப்புகள் வரப்போகிறது என்று தெரிந்தவருக்கு கோவில் நிலத்தில் தான் கட்சி அலுவலகம் இயங்குகிறது என்பது தெரியுமா? அல்லது தெரிந்தும்....

"சிவன் சொத்து குலநாசம்" என்று வசனம் பேசிய திமுக,

"அரியும் சிவனும் ஒண்ணு,
அறியாதவன் வாயில மண்ணு."

என்பதை வசதியாய் மறந்ததோ?

வெற்றித் தலைவர் தலைமையிலான ஆட்சியில், மக்கள் பணத்தை இதற்கு முன் தொட்டவர்களை விட மாட்டோம் என்பதை மிகவும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.

புகார்கள் எதிர்பார்ப்பு:

தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆட்சியைப் பிடித்துள்ள தவெக அரசு கடந்த கால திமுக அரசின் மீதான குற்றச்சாட்டுகள், புகார்கள் குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே தெரிவித்துள்ளது. இந்த நிலையில், அமைச்சர் ரமேஷ் வெளியிட்ட வேண்டுகோளுக்கு இணங்க பல்வேறு தரப்பினரும் புகார்கள் அளிப்பார் என்று கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்தது முதலே கடந்த ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த எவ வேலு, கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

Source: Read Full Article