TVK: "பண்ணையார் வீட்டுக் குழந்தை உளறல் நிதி.." உதயநிதியை விளாசிய தவெக!

TVK: "பண்ணையார் வீட்டுக் குழந்தை உளறல் நிதி.." உதயநிதியை விளாசிய தவெக!
News Image

தமிழ்நாட்டில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே திமுக - தவெக மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6ம் தேதி நடைபெற உள்ளது.

இடைத்தேர்தல்:

இந்த இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான தவெக - எதிர்க்கட்சியான திமுக - இரு தொகுதிகளையும் பறிகொடுத்த அதிமுக - நாம் தமிழர் - இந்திய கம்யூனிஸ்ட் என 5 முனைப் போட்டி நிலவுகிறது.

மதுராந்தகம் தொகுதியில் நேற்று முன்தினம் முதலமைச்சர் விஜய் பரப்புரையில் ஈடுபட்டார். உதயநிதி ஸ்டாலின் நேற்று பரப்புரையில் ஈடுபட்டார். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் ஐடி விங் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

உளறல் நிதி:

நம் வெற்றித் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்றதும் என்ன சொன்னார்? கொடுத்த வாக்குறுதிகளைப் படிப்படியாக
நிறைவேற்ற அவகாசம் வேண்டும் எனக் கேட்டார்.

இது உலகத்திற்கே தெரியும். ஆனால், அரசியல் அறிவும் புரிதலும் சிறிதும் அற்ற, நிதானமற்ற, சுயமற்ற பண்ணையார் வீட்டுக் குழந்தையான உளறல் நிதி ஆட்சிக்கு வந்த அடுத்த நிமிஷமே வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என்று நம் தமிழ்நாடு முதலமைச்சர் சொன்னதாக உளறிக் கொட்டுகிறார்.

ஆபாசநிதியே உன் பெயர்களின் வரிசையில் பொய்நிதிதான் முதல் பெயரா? பொய்கள்தான் உன் அரசியலின் முதலீட்டு
நிதியா?

இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.

சரமாரி விமர்சனங்கள்:

இரு கட்சியின் அதிகாரப்பூர்வ ஐடி பக்கங்களிலும் சரமாரியான விமர்சனங்களை இரு கட்சியினரும் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இடைத்தேர்தல் என்பதால் இரு கட்சியினரும் சரமாரி விமர்சனத்துடன் இந்த பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தனிப்பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி நடத்தி வரும் தவெக அரசுக்கு இந்த இரு தொகுதிகளின் வெற்றி மிக மிக முக்கியம் ஆகும். இந்த இரு தொகுதிகளின் வெற்றியைப் பொறுத்தே சட்டசபையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பலம் மேலும் அதிகரிக்கும்.

5 முனைப் போட்டி உள்ள நிலையில், தவெக அரசின் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் ஆகியோர் இரு தொகுதியிலும் முகாமிட்டுள்ளனர். திமுக-வைப் பொறுத்தமட்டிலும் முன்னாள் அமைச்சர்களும் இரு தொகுதியிலும் முகாமிட்டுள்ளனர்.

முடிவுகள்:

இந்த தொகுதியின் முடிவுகளைப் பொறுத்தே எஞ்சியுள்ள 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்களாக பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்த வேட்பாளர்களை களமிறக்கலாமா? வேண்டாமா? என்பதை தவெக முடிவு செய்யும் என்று கருதப்படுகிறது. தேர்தல் முடிவுகள் வரும் அக்டோபர் 9ம் தேதி வெளியாக உள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks