TVK vs DMK: "குடும்ப கட்சியால் பெரியார் சிலையை கட்சி அலுவலகத்தில் வைக்க முடியாது.." திமுக-வை விளாசிய தவெக

TVK vs DMK: "குடும்ப கட்சியால் பெரியார் சிலையை கட்சி அலுவலகத்தில் வைக்க முடியாது.." திமுக-வை விளாசிய தவெக
News Image

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று ஆளுங்கட்சியான தவெக, எதிர்க்கட்சியான திமுக, முன்னாள் ஆளுங்கட்சியான அதிமுக என பல்வேறு கட்சியினரும் அவரது நினைவிடம், ஆங்காங்கே உள்ள அவரது சிலைகளுக்கு மரியாதை செலுத்தினர்.

பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மரியாதை செலுத்தினர். இந்த நிலையில், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் பெரியார் சிலை இல்லை என்பதை தவெக விமர்சித்து பதிவிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக, தவெக ஐடி விங் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

தவெக அலுவலகத்தில் பெரியார் சிலை:

சமூகநீதிப்பாதையில் தந்தை பெரியார் கண்ட இலட்சிய சமூகத்தை உருவாக்கவே, வெற்றித் தலைவர் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களுள் ஒருவராக தந்தை பெரியாரை முன்னிறுத்தினார்.

ஊழலற்ற, லஞ்ச லாவண்யமற்ற மனசாட்சியுள்ள உண்மையான மக்களாட்சியை வழங்கும் ஓர் அரசியல் இயக்கத்தால் மட்டுமே தன்னுடைய கட்சி அலுவலகத்தில் தந்தை பெரியாரின் சிலையை வைக்க முடியும். அந்த அடிப்படையில்தான் வெற்றித் தலைவரும் தமது கட்சி அலுவலகத்தில் தந்தை பெரியாரின் சிலையை நிறுவியுள்ளார்.

சமூகநீதிப்பாதையில் தந்தை பெரியார் கண்ட இலட்சிய சமூகத்தை உருவாக்கவே, வெற்றித் தலைவர் அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களுள் ஒருவராக தந்தை பெரியாரை முன்னிறுத்தினார்.

ஊழலற்ற, லஞ்ச லாவண்யமற்ற மனசாட்சியுள்ள உண்மையான மக்களாட்சியை வழங்கும் ஓர் அரசியல் இயக்கத்தால்… pic.twitter.com/3lWEtDdlBo
— TVK IT Wing Official (@TVKHQITWingOffl) September 17, 2026

பெரியார் சிலையை வைக்க முடியாது:

மக்களை ஏமாற்றி, ஒரு குடும்பம் மட்டுமே கொள்ளையடிப்பதற்காக பெரியாரின் பெயரை பயன்படுத்தும் அரசியல் கட்சியால் தனது கட்சி அலுவலகத்தில் தந்தை பெரியாரின் சிலையை ஒருபோதும் வைக்க முடியாது.

தந்தை பெரியாரின் கொள்கைத் தடத்தில் பயணித்து, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற முழக்கத்தின்படி, சம வாய்ப்புகளால் அனைவரும் வளம்பெற்று, சுயமரியாதை மிளிரும் தமிழ்நாட்டை உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்!

இவ்வாறு பதிவிடப்பட்டுள்ளது.

அறிவாலயத்தில் இல்லாத பெரியார் சிலை:

பெரியாரின் திராவிட அரசியலை முன்னிட்டே பல்வேறு கட்சிகளும் தமிழ்நாட்டில் அரசியல் செய்து வருகின்றனர். தவெக, திமுக, அதிமுக ஆகிய பிரதான கட்சிகள் பெரியாரை தங்கள் வழிகாட்டியாக கொண்டு இயங்கி வருகின்றனர். இந்த நிலையில், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் பெரியார் சிலையை இதுவரை நிறுவாமல் இருப்பதை தவெக தற்போது சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளது.

பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு இன்று தலைமைச் செயலகத்தில் பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் விஜய், ஜேசிடி பிரபாகர், அமைச்சர்கள் ஆகியோர் உறுதிமொழி ஏற்றனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks