தமிழ்நாட்டில் காலியாக உள்ள 7 தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6ம் தேதி நடைபெற உள்ளது.

இடைத்தேர்தல்:

பொதுவாக தமிழ்நாட்டில் தேர்தல் என்றாலே பணப்பட்டுவாடா என்பது தொடர்ந்து நடந்து வருகிறது. அரசியல் கட்சிகள் தாங்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுக்கு குறிப்பிட்ட தொகையை சட்டவிரோதமாக அளித்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

டோக்கன் வழங்கிய திமுக?

இந்த இடைத்தேர்தலிலும் பணப்பட்டுவாடா நடப்பதாக தவெக திமுக மீது குற்றம் சாட்டியுள்ளது. திமுக மதுராந்தகம் தொகுதியில் ஓட்டுக்கு பணம் பெறுவதற்காக டோக்கன் விநியோகித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக, டோக்கன் புகைப்படத்தை வெளியிட்டுள்ள தவெக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

கூப்பனும் டோக்கனும்

கடந்த சட்டசபை தேர்தலின் போது வீட்டுக்கு வீடு டுபாக்கூர் கூப்பன் கொடுத்து வாக்கு கேட்ட தீயசக்தி திமுகவிற்கு, மக்கள் கொடுத்த பதிலடிக்குப் பிறகும் அந்தக்கட்சி இன்னும் திருந்தவில்லை. .மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில். ஆபாசநிதி பரப்புரை செய்த அச்சரப்பாக்கம்,… pic.twitter.com/yIKHHuS3uY

— TVK IT Wing Official (@TVKHQITWingOffl) September 27, 2026

கடந்த சட்டசபை தேர்தலின் போது வீட்டுக்கு வீடு டுபாக்கூர் கூப்பன் கொடுத்து வாக்கு கேட்ட தீயசக்தி திமுகவிற்கு, மக்கள் கொடுத்த பதிலடிக்குப் பிறகும் அந்தக்கட்சி இன்னும் திருந்தவில்லை. மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில். ஆபாசநிதி பரப்புரை செய்த அச்சரப்பாக்கம், மேல்சித்தாமூர் ஆகிய இடங்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறோம் என்று கூறி திமுகவினர் டோக்கன் விநியோகம் செய்துள்ளனர். ஏற்கனவே கூப்பன் கொடுத்து ஏமாற்றிய திமுக இன்று டோக்கன் கொடுத்து மக்களை மீண்டும் ஏமாற்றுகிறது.

இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.

நடவடிக்கை எடுக்குமா தேர்தல் ஆணையம்?

திமுக பணப்பட்டுவாடாவிற்காக டோக்கன் அளித்துள்ளதாக அளித்த தவெக குற்றம் சாட்டியுள்ள நிலையில், இதுதொடர்பாக தேர்தல் அதிகாரி மற்றும் காவல் நிலையத்தில் தவெக புகார் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரு தொகுதிகளின் இடைத்தேர்தல் தவெக அரசுக்கு மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது.

ஆளுங்கட்சியாக அமைந்துள்ள தவெக அரசுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், இந்த இரு தொகுதிகளின் வெற்றி அவர்களுக்கு மிகவும் தேவையானதாக அமைந்துள்ளது. அதேசமயம், எதிர்க்கட்சியான திமுக இந்த இடைத்தேர்தலை தவெக-வை வீழ்த்த தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீவிர பரப்புரை:

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளுக்கும் இடையே திமுக மற்றும் தவெக ஆகிய இரு கட்சியினரும் போட்டி போட்டு பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். மறுபுறம் அதிமுக, நாம் தமிழர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சியினரும் போட்டியிட்டு பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Source: Read Full Article