தமிழ்நாட்டின் சட்டமன்ற கூட்டத்தொடர் முன் எப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய தாக்கத்தை தமிழ்நாடு முழுவதும் ஏற்படுத்தியுள்ளது. முழுவதும் நேரலையில் தவெக ஆட்சியில் நேரலை ஒளிபரப்பப்பட்டது.

அனல்பறந்த சட்டமன்றம்:

காவல்துறை மானியக்கோரிக்கை மீதான முதலமைச்சரின் விஜய்யின் பதிலுரை திமுக-வினர் மத்தியில் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்க்காரியா கமிஷன், கடந்த கால ஆட்சி மீதான அமலாக்கத்துறை குற்றச்சாட்டு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டு ஆகியவை குறித்து விஜய் பேசினார். மேலும், மு.க.ஸ்டாலினின் மிசா கைது குறித்தும் விஜய் பேசினார்.

அப்போது, விஜய் வெளிப்படுத்திய உடல்மொழிக்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், இன்று முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் விஜய்க்கு அறிவுரை கூறும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

தவெக கண்டனம்:

இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் துணை முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி கடந்த காலங்களில் மேடையில் அதிமுக-வின் மறைந்த பொதுச்செயலாளரும், மறைந்த முதலமைச்சருமான ஜெயலலிதா பற்றியும், முன்னாள் முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமி பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோக்களை தவெக ஐடி விங் பகிர்ந்துள்ளது.

தலைமுறை தலைமுறையாகத் தொட்டுத் தொடரும் திமுகவின் ஆபாச பாரம்பரியம்!

பெண்ணியம் என்பார்! பெண் விடுதலை என்பார்! ஆனால் கட்சி மேடை, கல்யாண மேடை, பொது மேடை எதுவாயினும் ஆபாசத்தை மட்டுமே கொள்கையாகக் கொள்வார்.

குடும்ப வாரிசு + ஆபாச பேச்சு + வன்மம் +அவதூறு = திமுகவின் தலைமை தகுதி… pic.twitter.com/VXuY6XyO1q

— TVK IT Wing Official (@TVKHQITWingOffl) September 10, 2026

மேலும், அந்த வீடியோக்களுடன் தவெக பதிவிட்டுள்ளதாவது,

ஆபாச பாரம்பரியம்:

தலைமுறை தலைமுறையாகத் தொட்டுத் தொடரும் திமுகவின் ஆபாச பாரம்பரியம்! பெண்ணியம் என்பார்! பெண் விடுதலை என்பார்! ஆனால் கட்சி மேடை, கல்யாண மேடை, பொது மேடை எதுவாயினும் ஆபாசத்தை மட்டுமே கொள்கையாகக் கொள்வார்.

குடும்ப வாரிசு + ஆபாச பேச்சு + வன்மம் +அவதூறு = திமுகவின் தலைமை தகுதி சான்றிதழ்! பேச்சில் இத்துணை ஆபாசம் பாய்ந்து இருந்தால், இவர்களின் ஆட்சியில் மட்டும் எத்துணை கண்ணியம் இருந்திருக்கும்?

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று ஊருக்கு உபதேசித்துவிட்டு இவர்கள் பேசுவது ஆபாசமும் அசிங்கமும் தான்

இவ்வாறு பதிவிட்டுள்ளனர்.

சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் விஜய் பெண்கள் குறித்து அவதூறாக ஆபாசமாக யார் பேசினாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். மேலும், ஆபாசநதி, வன்மநதி என்று உதயநிதியையும் மறைமுகமாக விமர்சித்து பேசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article