விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழில் வெளியாகியுள்ள திரைப்படங்கள் மண்டாடி மற்றும் சர்தார் 2. சர்தார் படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து சர்தார் 2 படத்தை முதல் பாகத்தை இயக்கிய மித்ரன் இயக்கியுள்ளார்.

மண்டாடி:

விடுதலை படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமான சூரி தொடர்ந்து கதாநாயகனாக அசத்தி வரும் நிலையில், அவரது நடிப்பில் வெளியாகியுள்ள புதிய படம் மண்டாடி. படகு போட்டியை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் பாராட்டு:

கார்த்தியின் சர்தார் 2 படத்தைக் காட்டிலும் சூரியின் மண்டாடி படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், மண்டாடி படத்தை பாராட்டி நடிகர் சிவகார்த்திகேயன் நல்ல கதைகள் எப்போதும் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று பதிவிட்டுள்ளார். மேலும், தனது அண்ணன் சூரிக்கும் மொத்த குழுவினருக்கும் வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2022ம் ஆண்டு சர்தார் படமும், பிரின்ஸ் படமும் அக்டோபர் 21ம் தேதி ஒரே நாளில் வெளியானது. அப்போது சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் படத்தைக் காட்டிலும் கார்த்தி நடித்த சர்தார் படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது. அப்போது, நடிகர் சூர்யா தற்போது சிவகார்த்திகேயன் பதிவிட்டுள்ள அதே வார்த்தையான நல்ல கதை எப்போதும் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று பதிவிட்டிருந்தார்.

Great reports for #Mandaadi 💥💥🔥🔥👏👏👍👍@sooriofficial annan’s hard work, persistence and relentless dedication have truly paid off. Good content always wins big! Congrats, my dear annan, and the entire team, on the blockbuster success 🤗❤️

— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) September 10, 2026

மேலும், சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான கருப்பு படத்தில் வில்லனாக நடித்த ஆர்ஜே பாலாஜியின் கதாபாத்திரம் பிகே எனப்படும் பேபி கண்ணன். அப்போது, படத்தின் கிளைமேக்ஸில் தம்பி பிகே கையில் துப்பாக்கி கிடைச்சா யார் என்னனு பாக்கமாக நீட்டிருவியோ? என்ற ஒரு வசனம் இருக்கும். கோட் படத்தில் விஜய்யின் கையில் இருந்து துப்பாக்கியை சிவகார்த்திகேயன் பெறும் காட்சி இருக்கும்.

அவரை மறைமுகமாக தாக்கும் வகையில் இந்த காட்சி இருப்பதாகவே ரசிகர்கள் பலரும் கருதினர். அப்போது முதல் சிவகார்த்திகேயன் மற்றும் சூர்யா ரசிகர்கள் இடையே மோதல் மேலும் அதிகமாக காணப்பட்டது. தற்போது சிவகார்த்திகேயன் பதிவிட்டுள்ள பதிவு சூர்யாவை சீண்டும் விதமாக அமைந்துள்ளதாகவே சூர்யா ரசிகர்களும், சூர்யாவிற்கான பதிலடி என்று சிவகார்த்திகேயன் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதேசமயம், சிவகார்த்திகேயன் நடிகர் சர்தார் 2 படத்திற்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article