அளந்து விட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விட்டதால் தான் திமுக எதிர்க்கட்சியாக இருக்கிறது என தமிழக வெற்றிக் கழகம் ஐடி விங் சரமாரியாக பதிலடி கொடுத்துள்ளது.

மதுராந்தகத்தில் முதலமைச்சர் விஜய் பரப்புரை

அக்டோபர் 6ம் தேதி மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மதுராந்தகம் தொகுதியில் தவெக தலைவரும், முதல்வருமான விஜய் மரகதம் குமரவேலை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் திமுகவை தாறுமாறாக விமர்சித்தார். குறிப்பாக பாலியல் வழக்கில் சிக்கிய ஜெம் வீரமணி வழக்கை திமுக ஆட்சியில் மூடி மறைத்து விட்டார்கள் என குற்றம் சாட்டினார். இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்தார்.

அதாவது மதுராந்தகம் ஷூட்டிங்கில் உங்களின் டயலாக் டெலிவரியைப் பார்த்தேன் . படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் எனச் சொல்லிவிட்டு, மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் முதல்வரே, முதலமைச்சர் பொறுப்புக்குரிய கண்ணியத்தோடுதான் நாம் பேசுகிறோமா? என்பதை சுயபரிசோதனை செய்யுங்கள் என விமர்சித்து சில கேள்விகளையும் எழுப்பியிருந்தார்.

காமாலைக்காரனுக்குக் காண்பதெல்லாம் மஞ்சளாகத் தெரியுமாம்!

ஆட்சியில் இருந்த கடந்த 5 ஆண்டுகளும் விளம்பரப் படங்களில் நடித்து, dialogue பேசி, shooting-ல் busy-ஆக இருந்ததாலோ என்னவோ, தற்போதைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் மனசாட்சியுள்ள மக்களாட்சியையும் shooting மாதிரியே பார்க்கிறார்…

— TVK IT Wing Official (@TVKHQITWingOffl) September 25, 2026

பொய்யிற் சிறந்த பெருமானே - தவெக சாடல்

இதற்கு பதிலளித்துள்ள தவெக ஐடி விங், “காமாலைக்காரனுக்குக் காண்பதெல்லாம் மஞ்சளாகத் தெரியுமாம். ஆட்சியில் இருந்த கடந்த 5 ஆண்டுகளும் விளம்பரப் படங்களில் நடித்து, டயலாக் பேசி, ஷூட்டிங்கில் பிஸியாக இருந்ததாலோ என்னவோ, தற்போதைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் மனசாட்சியுள்ள மக்களாட்சியையும் ஷூட்டிங் மாதிரியே பார்க்கிறார் போல!

தேர்தல் முடிவு வந்ததும், வாக்களித்த விரல் மை காய்வதற்குள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த பலருடன் கைகோர்த்து, கொல்லைப்புறம் வழியாக ஆட்சியைப் பிடிக்க அலைந்ததை, உங்கள் கூட்டணியில் இருந்த கட்சித் தலைவர்களே போட்டு உடைத்ததை மக்கள் பார்த்தார்களே!திமுகவைப் பற்றி இப்படிச் சொல்லிவிட்டார்கள்… அவைக்குறிப்பிலிருந்து நீக்குங்கள் என்று "அய்யோ அம்மா" என பவளவிழா பாப்பாவின் உறுப்பினர்கள் அலறியதையெல்லாம், வெற்றித் தலைவர் ஆட்சியில் அளித்த வாக்குறுதியின்படி முதல்முறையாக ஒளிபரப்பான முழு சட்டமன்ற நேரலையில் மக்கள் பார்த்துச் சிரித்தார்களே!

அளந்து விட்ட வாக்குறுதிகளை, 5 ஆண்டுகால ஆட்சியின்போது நிறைவேற்றாமல் விட்டதால்தான் மக்கள் உங்களை எதிர்க்கட்சி வரிசையில் அமர வைத்திருக்கிறார்கள். கரூர் சம்பவத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடவில்லை என்று பவளவிழா பாப்பா கட்டுக்கதைக் கட்ட இது கருணாநிதி காலமல்ல. டிஜிட்டல் தரவுகள் ஏராளமாக இருக்கும் காலம். அப்டேட் ஆகுங்கள், பொய்யிற் சிறந்த பெருமானே!

திமுக தலைமை முதல் ஆபாசக் கொத்தடிமைகள் வரை ஆபாசமாகத்தான் பேசுவார்கள் என்ற உண்மையான கடந்த கால சாதனைகள் கசக்கத்தான் செய்யும் டம்மி. "இன்ஸ்டாகிராமால் தோற்றுவிட்டோம்" என்று மேடைக்கு மேடை ஒப்பாரி வைக்காமல், மக்கள் ஏன் உங்களை நிராகரித்தார்கள் என்பதைச் சும்மா இருக்கும் நேரத்தில் யோசித்துப் பாருங்கள், டம்மி டாடி. ஆட்சியில் இருந்தபோது தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று அறியாது இருந்தவர், இப்போதும் தன்னைச் சுற்றி நடப்பதை அறியவில்லை என்பதை இந்த பலவீனமாக ஸ்கிர்ப்டை போஸ்டாக போட்டதன் மூலம் மீண்டும் தெளிவுபடுத்தியிருக்கிறார், ஸ்வீட் அங்கிள் இடைத்தேர்தலிலும் பவளவிழா பாப்பா வீழ்வது உறுதி, த.வெ.க. வெல்வது உறுதி என தாறுமாறாக விமர்சனம் செய்துள்ளது.

Source: Read Full Article