Trump about Hormuz: “ஹார்முஸ் ஜலசந்திய ‘ட்ரம்ப் ஜலசந்தி‘-ன்னு மாத்திடலாமா.?“: அமெரிக்க அதிபரின் சேட்டையான பதிவு

Trump about Hormuz: “ஹார்முஸ் ஜலசந்திய ‘ட்ரம்ப் ஜலசந்தி‘-ன்னு மாத்திடலாமா.?“: அமெரிக்க அதிபரின் சேட்டையான பதிவு
News Image

ஈரான் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு மத்தியில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஹார்முஸ் ஜலசந்தி குறித்து ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். சமூக ஊடகங்களில் பதிவிட்ட அவர், ஹார்முஸ் ஜலசந்தியின் பெயரை 'ட்ரம்ப் ஜலசந்தி' என மாற்ற வேண்டுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நேரத்தில், ட்ரம்பின் இந்த அறிக்கை வந்துள்ளது. பேச்சுவார்த்தை மூலம் ஒரு தீர்வு எட்டுவதற்கான வாய்ப்பு குறைந்துகொண்டே வருகிறது.

ட்ரம்ப் என்ன பதிவிட்டார்.?

"ஹார்முஸ் ஜலசந்தியின் பெயரை ட்ரம்ப் ஜலசந்தி என்று மாற்றிவிடலாமா?" என ட்ரம்ப் தனது சமூக ஊடக பக்கத்தில் எழுதியிருந்தார். இந்த முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிப்பாதையின் மீது இப்போது அமெரிக்காவுக்கு கட்டுப்பாடு உள்ளது என்றும் அவர் கூறியிருந்தார். அமெரிக்காவைப் போலவே, இதுவும் முன்னெப்போதையும் விட ‘சூடாக‘ இருக்கும் என்றும் அவர் எழுதியிருந்தார்.

வெளி தலையீட்டை எதிர்க்குமாறு மத்திய கிழக்கு நாடுகளுக்கு சீன அதிபர் வேண்டுகோள்

இதற்கிடையே, பிராந்தியத்தில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில் சீனாவும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. வெளி தலையீடுகளை எதிர்க்குமாறு மத்திய கிழக்கு நாடுகளை சீன அதிபர் ஷி ஜின்பிங் நேற்று வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றங்களால், அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள கடல்வழிப் போக்குவரத்தை பாதுகாக்க, பிராந்திய நாடுகளுடன் இணைந்து செயல்பட பெய்ஜிங் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

10 ஆண்டுகளுக்குப் பிறகு, கெய்ரோவிற்கு மேற்கொண்ட தனது முதல் பயணத்தின்போது, ​​எகிப்திய அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசியுடன் உரையாடிய ஷி ஜின்பிங், இந்த கருத்துக்களை தெரிவித்தார். பிராந்தியத்தில் தனது செல்வாக்கை வலுப்படுத்தவும், முதலீடுகளை அதிகரிக்கவும், 6 மாத கால மோதலின் தாக்கத்தை சமாளிக்கவும் பெய்ஜிங் முயன்று வரும் வேளையில், இந்த பயணம் அமைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

"மத்திய கிழக்கு மக்கள் தங்கள் விவகாரங்களுக்கு தாங்களே எஜமானர்கள் என்ற கொள்கையை நாம் நிலைநிறுத்த வேண்டும். வெளி தலையீடுகளை எதிர்க்க வேண்டும். மேலும், அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்த உரையாடலை வலுப்படுத்துவதில், பிராந்திய நாடுகளுக்கு ஆதரவளிக்க வேண்டும்," என்று சிசியுடனான சந்திப்பில் ஷி கூறியதாக, சீன அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவாவை மேற்கோள் காட்டி தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

பேச்சுவார்த்தைக்கு திரும்புமாறு ஈரான், அமெரிக்காவிற்கு எகிப்தும், கத்தாரும் வேண்டுகோள்

இதற்கிடையே, முறிந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்புமாறு அமெரிக்காவையும் ஈரானையும், எகிப்து மற்றும் கத்தார் நாடுகளின் மூத்த தூதர்கள் வலியுறுத்தியுள்ளனர். எகிப்திய வெளியுறவு அமைச்சர் பத்ர் அப்தெல் அச்சாச்சி, கத்தார் வெளியுறவு அமைச்சர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானியுடன் நேற்று தொலைபேசியில் பேசியதாக அவர்கள் தெரிவித்தனர். பதற்றம் அதிகரிப்பது, பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று அமைச்சர்கள் எச்சரித்ததாக எகிப்திய வெளியுறவு அமைச்சகம் கூறியது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks