TN Weather News: 21 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னையிலும் இன்று கனமழை? தமிழக வானிலை அறிக்கை

TN Weather News: 21 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னையிலும் இன்று கனமழை? தமிழக வானிலை அறிக்கை
News Image

Tamil Nadu Weather Update (21-09-2026): சென்னையில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி:

வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அப்பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வட அந்தமான் கடல் பகுதிகளில் நிலவுகிறது.  தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் வலுவடையக்கூடும். இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 23 செப்டம்பர் அன்று காலை வாக்கில் வடக்கு ஆந்திரப்பிரதேசம் தெற்கு ஒடிசா கடற்கரைக்கு அருகே மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளை சென்றடையக்கூடும்.

படிப்படியாக 22 செப்டம்பர் மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மற்றும் அதனுடன் கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி முதல், தெற்கு உள்கர்நாடகா வரை மத்திய வங்ககடல் மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேசம் வழியாக கடல் மட்டத்திலிருந்து 5.8 கி.மீ. உயரம் வரை ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. சுமார் 0.9 கி.மீ உயரத்தில் தெற்கு கடலோர ஆந்திரம் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்ககடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

21 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:

இதன் காரணமாக இன்று நீலகிரி, கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, சிவகங்கை, தஞ்சாவூர், மதுரை, கடலூர், திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த இரண்டு நாட்களுக்கான வானிலை:

22-09-2026: மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.வளிமண்டல அறிவியல் கற்க

23-09-2026: மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.சுற்றுலா இடங்களை ஆராயுங்கள்

சென்னை பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks