TN New Ration Card Rules: இனிமேல் ரேஷன் கார்டு வாங்குவது ரொம்ப ஈஸி.. அரசு பிறப்பித்த புது ரூல்ஸ் என்ன தெரியுமா?

TN New Ration Card Rules: இனிமேல் ரேஷன் கார்டு வாங்குவது ரொம்ப ஈஸி.. அரசு பிறப்பித்த புது ரூல்ஸ் என்ன தெரியுமா?
News Image

Tamil Nadu New Ration Card Apply Online: தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு கோரி மாவட்ட அளவில் செயல்பட்டு வரும் இ-சேவை மையங்கள் மூலமாகப் ஏராளமான பொதுமக்கள் தொடர்ந்து விண்ணப்பித்து வருகிறார்கள். அப்படி விண்ணப்பிக்கும் போது, கேஸ் சிலிண்டர் இணைப்பிற்கான ரசீதை நிச்சயமாக இணைக்க வேண்டும் என்று அந்தந்த வட்ட வழங்கல் அலுவலர்கள் வற்புறுத்தி வந்ததாகத் தெரியவருகிறது. ரேஷன் கார்டு பெற்ற பிறகுதான் புதிய கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற முடியும் என்ற சூழல் இருக்கும் நிலையில், இந்த கண்டிப்பான உத்தரவால் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியாமல் பொதுமக்கள் பலரும் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

துணை கமிஷனர் பிறப்பித்த அதிரடி உத்தரவு

பொதுமக்களின் இந்த நடைமுறைச் சிக்கல் மற்றும் சிரமங்கள் குறித்து அரசுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் புகார்கள் குவிந்தன. இதனைத் தொடர்ந்து, உணவு பொருள் வழங்கல் துறை துணை கமிஷனர் ராகினி ரவிச்சந்திரன் உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது கேஸ் சிலிண்டர் இணைப்பிற்கான ரசீதை சமர்ப்பிப்பது கட்டாயம் கிடையாது என்றும், அதனை கண்டிப்பாக இணைக்க வேண்டும் என எந்தவித உத்தரவும் துறையால் வெளியிடப்படவில்லை என்றும் மிகத் தெளிவாக விளக்கமளித்துள்ளார்.

முகவரிச் சான்றுகள் மற்றும் கட்டாய ஆவணங்கள்

மேலும், ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்த நாளிலிருந்து 60 நாட்களுக்கு பின்னரே கார்டு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதே வேளையில், விண்ணப்பத்துடன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் அட்டையையும் கட்டாயமாகப் பதிவேற்ற வேண்டும் என்பதில் மாற்றமில்லை. ஆதார் அட்டையுடன் சேர்த்து முகவரிச் சான்றாக சொத்து வரி ரசீது, வாடகை ஒப்பந்த பத்திரம், மின்கட்டண ரசீது அல்லது கேஸ் சிலிண்டர் ரசீது ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் இணைத்தால் போதுமானது என்று உணவு பொருள் வழங்கல் துறை சார்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks