TN Govt Job: 4,724 செவிலியர் காலிப்பணியிடங்கள் - தகுதி, வயது வரம்பு, ஊதியம் - முழு விவரங்கள் இதோ

TN Govt Job: 4,724 செவிலியர் காலிப்பணியிடங்கள் - தகுதி, வயது வரம்பு, ஊதியம் - முழு விவரங்கள் இதோ
News Image

TN Govt Nurse Job: தமிழ்நாடு முழுவதும் நிரப்பப்பட உள்ள 4 ஆயிரத்து 724 செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, செப்டம்பர் 25ம் தேதி மாலை 5 மணியுடன் அவகாசம் முடிவடைய உள்ளது.

4,724 செவிலியர் காலிப்பணியிடங்கள்

தமிழ்நாடு முழுவதும் 4 ஆயிரத்து 724 செவிலியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. தேசிய சுகாதார இயக்கம் மூலம் நிரப்பப்பட உள்ள பணிக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம், வரும் செப்டம்பர் 25ம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைய உள்ளது. தகுதியான நபர்கள் உரிய ஆவணங்களை இணைத்து அதிகாரப்பூர்வ முகவிரிக்கு, குறிப்பிட்ட தேதிக்கு முன்பாக அனுப்ப வலியுறுத்தப்பட்டுள்ளது.

செவிலியர் காலிப்பணியிடங்களின் விவரங்கள்

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அறிவிப்பு பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை, மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் துறை, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆகியவற்றின் கீழ் உள்ள நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு, ஒப்பந்த அல்லது தற்காலிக அடிப்படையிலான 'பணியாளர் செவிலியர்'  பணிக்குத் தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்க்ள் வரவேற்கப்படுகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 25.09.2026 அன்று மாலை 5:00 மணிக்குள் மாவட்ட சுகாதார அலுவலர் / மாவட்ட சுகாதாரச் சங்க அலுவலகத்தை வந்தடையய வேண்டும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி கீழே வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம், இந்த முகவரி செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு பொருந்தாது என விவரிக்கப்பட்டுள்ளது.

The Executive Secretary,

District Health Office,

Respective District Health Society

தமிழில்

நிர்வாக செயலாளர்,

மாவட்ட சுகாதார அலுவலகம்,

சம்பந்தப்பட்ட மாவட்ட சுகாதாரச் சங்கம்

TN Government has issued a notification to fill 4,724 nursing vacancies across the state on a contractual basis.

The vacancies will be filled through the National Health Mission (NHM)

Applications can be submitted until the 25th pic.twitter.com/2cqGr3Jr6d
— Kannan Jeevanantham (JK) (@Im_kannanj) September 12, 2026

வயது வரம்பு:

நிரப்பப்பட உள்ள 4 ஆயிரத்து 724 செவிலியர் பணியிடங்களுக்கு 50 வயதுக்குட்பட்ட நபர்கள் மட்டுமே விண்ணபிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் செவிலியர் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட, அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் செவிலியர் கல்லூரியில் இருந்து பெற்ற ஜி.என்.எம் பி.எஸ்சி. நர்சிங் பட்டம் பெற்று இருக்க வேண்டும். தமிழ்நாடு செவிலியர் மற்றும் மருத்துவச்சி கவுன்சிலில் பதிவு செய்து இருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்: விண்ணப்பித்து ஆண்டுகளாக காத்திருக்கும் பாகிஸ்தான் - கண்டுகொள்ளாதா BRICS அமைப்பு- கார்ட் வருமா?

ஊதிய விவரம்:

பணி நியமனம் பெறுபவர்களுக்கு அனுபவ அடிப்படையில் ஊதியம் வழங்கப்படக்கூடும்.

விண்ணப்பத்தை பெறுவது எப்படி?

விண்ணப்பப் படிவம் / மாவட்ட வாரியான காலிப்பணியிட விவரங்களை NHM-TN இணையதளத்திலிருந்து (https://nhm.tn.gov.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இரண்டு மாவட்டங்களுக்கு விலக்கு:

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்த மாவட்டங்களில் மட்டும் தற்போதைக்கு செவிலியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் பெறப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks