இடைத்தேர்தல்- அதிமுக புகார்

தமிழகத்தில் இரண்டு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் பணியில் தவெக ஈடுபட்டுள்ளதாக அதிமுக சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு மாநிலங்களவை எம்,பியும், வழக்கறிஞர் பிரிவு செயலாளருமான இன்பதுரை அளித்து புகார் மனுவில், கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி தொலைக்காட்சி செய்தி ஊடகங்களில் பரவலாக வெளியான தகவல்களின்படி, அச்சரப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட ரெட்டிப்பாளையத்தில், தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக வாக்காளர்களைத் தூண்டும் நோக்கில்,

வாக்காளர்களுக்கு தவெக பணம்

TVK சார்பில் வாக்காளர்களுக்கு பெருமளவு பணம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது மட்டுமில்லாமல் நம்பத்தகுந்த தகவல்களின் அடிப்படையில், இதேபோன்ற சட்டவிரோத பண விநியோகம் மற்றும் வாக்காளர்களைத் தூண்டும் நடவடிக்கைகள் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய முழு சட்டமன்றத் தொகுதிகளிலும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிய வருவதாக அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

எனவே இந்த செயல், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடைமுறையை நேரடியாக பாதிப்பதுடன், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், லஞ்சம் வழங்குதல் (Bribery) என்ற கடுமையான ஊழல் தேர்தல் நடைமுறையாகவும் என உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துவதாக அந்த கேட்டுகொண்டுள்ளார். ம

1. தொகுதி முழுவதும் கள விசாரணை

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய முழு சட்டமன்றத் தொகுதிகளிலும், மாவட்ட தேர்தல் அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், பறக்கும் படையினர் , நிலையான கண்காணிப்புக் குழுக்கள் ஆகியோரைக் கொண்டு உடனடியாக விரிவான கள அளவிலான விசாரணையை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.

2. ஆதாரங்களைப் பாதுகாத்தல்

தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்புகள், CCTV காட்சிகள், களத்தில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகள் மற்றும் சமூக ஊடகம் மற்றும் மின்னணு ஆதாரங்கள் உள்ளிட்ட அனைத்து தொடர்புடைய ஆதாரங்களையும், அவை மாற்றப்படுவதற்கோ அல்லது அழிக்கப்படுவதற்கோ முன்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகப் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும்.

3. கணக்குகள் மற்றும் செலவினங்களை ஆய்வு செய்தல்

சம்பந்தப்பட்ட வேட்பாளர் மற்றும் அரசியல் கட்சியின் தேர்தல் பிரசாரம், வங்கிக் கணக்குகள் மற்றும் தேர்தல் செலவு தொடர்பான பதிவுகளைத் தணிக்கை செய்து, கணக்கில் காட்டப்படாத பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளனவா என்பதை கண்டறிய வேண்டும். மேலும், தேர்தல் செலவு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட விவரங்களும் சரிபார்க்கப்பட வேண்டும்.

4. சட்ட மற்றும் குற்றவியல் நடவடிக்கை

இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கண்டறியப்படும் அனைத்து குற்றச் செயல்பாட்டாளர்கள், அவர்களுக்கு உதவியவர்கள் மற்றும் பணத்தை கையாள்பவர்கள் மீது, அவர்களின் அரசியல் சார்பு அல்லது பதவியைப் பொருட்படுத்தாமல், FIR பதிவு செய்து, கடுமையான குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும்.

5. தீவிரப்படுத்தப்பட்ட கண்காணிப்பு

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் உள்ள அனைத்து பதற்றம் அதிகம் உள்ள பகுதிகளிலும், பறக்கும் படைகள், சோதனைச் சாவடிகள் மற்றும் கண்காணிப்பு அமைப்புகளின் பணியமர்த்தலை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் மேலும் பணம் விநியோகிக்கப்படுவதையோ அல்லது வாக்காளர்களைத் தூண்டும் நடவடிக்கைகள் நடைபெறுவதையோ தடுக்க வேண்டும் என அந்த கடித்தத்தில் இன்பதுரை குறிப்பிட்டுள்ளார்.

Source: Read Full Article