TN Assembly: கின்னஸ் சாதனை, அம்பலப்பட்ட MLAக்களின் செயல்பாடு.. களேபரமான தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் - ஒரு ரீவைண்ட்!

TN Assembly: கின்னஸ் சாதனை, அம்பலப்பட்ட MLAக்களின் செயல்பாடு.. களேபரமான தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் - ஒரு ரீவைண்ட்!
News Image

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், அதில் நடந்த சில சுவாரஸ்வமான நிகழ்வுகளைப் பற்றிக் காணலாம்.

தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக வென்ற நிலையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த தவெகவின் ஒவ்வொரு செயல்பாடும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தது. அந்த வகையில் தவெக அரசின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் அதுவும் முழுவதும் நேரலை என தெரிவிக்கப்பட்டது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் டிவி முன் ஐக்கியமாகும் நிலைக்கு சென்றனர்.

கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி பொது பட்ஜெட்டும், ஆகஸ்ட் 6ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் ஆகஸ்ட் 7,10, 11 ஆகிய நாட்களில் நடைபெற்றது. அதேசமயம் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நிதியமைச்சர் மரிய வில்சன், வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோர் ஆகஸ்ட் 12ம் தேதி பதிலளித்தனர். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு துறை சார்ந்த மானியக்கோரிக்கைகளுக்கு அந்தந்த அமைச்சர்கள் பதிலளித்தனர்.

அனல் பறந்த அவை - எகிறிய எதிர்க்கட்சிகள்

தமிழ்நாடு சட்டமன்றம் தொடங்கிய நாள் முதலே அனல் பறக்க தொடங்கியது. அனுபவம் வாய்ந்த கட்சிகள் எதிர்க்கட்சிகள் வரிசையில் இருந்த நிலையில் புதிதாக வந்த தவெக சமாளிக்குமா என்றெல்லாம் கேள்விகள் எழுந்தது. ஆனால் அனைத்தையும் தவிடுபொடியாக்கும் வண்ணம் தவெகவில் இருந்து பதில்கள் பறந்தன. அமைச்சர்கள் தொடங்கி தவெக எம்.எல்.ஏ.,க்கள் வரை இதுவரை நடந்த திமுக, அதிமுக ஆட்சியில் நிகழ்ந்த முறைகேடுகள், நடக்காத மக்கள் பணிகள், தேவைகள் போன்றவற்றை பட்டியலிட தமிழ்நாட்டில் இவ்வளவு பிரச்னைகள் இருக்கிறதா என மக்கள் நொந்துக்கொள்ளும் வண்ணம் இருந்தது.

திமுக வெளிநடப்பு - சி.வி.சண்முகம் கோபம்

சட்டமன்றம் முழுவதுமாக நேரலை செய்யப்பட்டது. இந்த முறை சட்டப்பேரவை வரலாற்றிலேயே மிக நீண்ட நேரம் நடைபெற்ற கூட்டத்தொடர் என்ற புதிய சாதனையை இத்தொடர் நிகழ்த்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 7ம் தேதி முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் சுமார் 9 மணி நேரம் 50 நிமிடங்கள் நீடித்தது. இதற்கு முன்னாள் ஆகஸ்ட் 25ம் தேதி 9 மணி நேரம் 43 நிமிடங்கள் நீடித்தது.

நேரலை செய்யப்பட்டதால் மக்கள் காலை அவை தொடங்கியது முதல் முடியும் வரை என்ன நடக்கிறது என பார்த்ததால் எதிர்க்கட்சிகள் செய்வதறியாது திகைத்தது. முன்பெல்லாம் எடுத்ததற்கெல்லாம் வெளிநடப்பு என்பது இம்முறை முற்றிலும் குறைந்தது. திமுக ஒருமுறை அவர்களாகவும், இன்னொரு முறை அவைக்காவலர்களாலும் வெளியேற்றப்பட்டனர். தவெகவினை கூட்டத்தொடர் முழுவதும் திமுக ஆட்சியின் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டியதால் அனல் பறந்தது.

21 நாட்கள் நடைபெற்ற சட்டப்பேரவைய்ல் மொத்தம் 14,399 கேள்விகள் கோரிக்கை விடுக்கப்பட்டு அதில் 3,455 முக்கிய கேள்விகள் கேட்கப்பட்டன. இதில்  23 வினாக்களுக்கு நேரடியாக அவையில் வாய்மொழியாகப் பதிலளிக்கப்பட்டது. இதில் அதிக கேள்விகளுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பதிலளித்துள்ளார். மானியக்கோரிக்கைகள் மீது 165 எம்.எல்.ஏ.க்களுக்கு பேச வாய்ப்பளிக்கப்பட்டது.

சட்டத்துறை சம்பந்தமான விவாதத்தின்போது முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சபாநாயகரிடம் கோபமாக நடந்துக் கொண்டார். பின்னர் தன் தவறுக்கு வருத்தம் தெரிவித்தார். இந்த முறை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் மிகவும் நடுநிலையுடன் செயல்பட்டு அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் வாய்ப்பு வழங்கி பேச வைத்ததாக பாராட்டுகள் குவிந்தது. மேலும் எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் சொன்ன கருத்துகளையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கி அதிர வைத்தார்.

சபாநாயகர் இல்லாத நேரத்தில் தவெக எம்.எல்.ஏ.,க்கள் சத்யபாமா, விஜய் சரவணன், அதிமுக எம்.எல்.ஏ., தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் அவையை வழிநடத்தினர். தேமுதிக எம்.எல்.ஏ.  பிரேமலதா, பாமக எம்.எல்.ஏ. சௌமியா அன்புமணி உள்ளிட்டோர் இந்த கூட்டத்தொடரில் சிறப்பாக செயல்படுவதாக சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்தது. மொத்தமாக 170 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks