ஆட்சியை பிடித்த தவெக

தமிழகத்தில் திமுக- அதிமுக என இரு கட்சிகள் மட்டுமே கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி புரிந்து வந்த நிலையில், திடீர் திருப்பமாக 2024ஆம் ஆண்டு தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், 2026ஆம் ஆண்டு தாம் சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தலிலேயே வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில் அடுத்த இலக்காக பிரதமர் பதவியை குறிவைத்து தவெகவினர் காய் நகர்த்தி வருகிறார்கள். தவெக அமைச்சர்கள் முதல் அக்கட்சி நிர்வாகிகள் வரை பிரதமர் விஜய் என அடித்து கூறி வருகிறார்கள். அதிலும் கவுண்டம்பாளையம் எம்எல்ஏவும் ஜோதிடருமான கனிமொழி கூறுகையில், கடந்த 2025ஆம் ஆண்டு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றார் என கணித்திருந்தேன். அந்த கணிப்பி நிஜமாகியுள்ளது.

பிரதமர் விஜய்- தவெகவினர் குஷி

அதே போல 2029ஆம் ஆண்டு பிரதமாக விஜய் பதவியேற்பார் என கூறியிருந்தார். இந்த பேச்சு காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது மட்டுமில்லாமல் அடுத்த பிரதமர் யார் என வட மாநிலங்களில் விஜய் பெயரை முன்னிலைப்படுத்தி ரீல்ஸ் பரவி வருகிறது. மேலும் இந்தியா டுடே எடுத்த கணிப்பில் மோடி, ராகுல் காந்தி அடுத்தாக விஜய் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் தவெக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பிரதமர் வேட்பாளர் விஜய் என்ற கேள்விக்கு பரபரப்பு பதில் அளித்துள்ளார்.

அந்த வகையில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், பிரதமர் வேட்பாளர் விஜயா என கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முன்னணித் தலைவர்கள் பிரதமர் வேட்பாளர் விஜய் என இதுவரை பேசவில்லை. ஆனால் மற்றவர்கள் அவ்வாறு பேசி வருகின்றனர். அதை கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்று எடுத்துக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.

பிரதமர் வேட்பாளர் விஜய்- திருமா விளக்கம்

என்னதான் அமைச்சர்கள் இருந்தாலும், தொண்டர்களின் மனநிலை இருக்கத்தான் செய்யும். வடஇந்திய ஊடகங்கள் பிரதமர் வேட்பாளர்கள் வரிசையில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோருடன் விஜய்யையும் குறிப்பிட்டு வருவதைப் பார்க்கிறோம். இதன் காரணமாக தமிழக வெற்றிக் கழகத்தினர் உற்சாகத்துடன் அவ்வாறு பேசி வருகிறார்கள் என திருமாவளவன் கூறினார். ராகுல் காந்தி பிரதமர் இல்லை என்று யாரும் கூறவில்லை. பிரதமர் வேட்பாளர் தொடர்பாக பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம். 2029 தேர்தல் வரட்டும், அப்போது அது குறித்து கூறுகிறேன் எனவும் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

தவெக கூட்டணி கூட்டம்.?

இதனையடுத்து தவெக கூட்டணி கட்சி கூட்டம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைப்பது தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் இரண்டாவது முறையாக நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தை அவர்களே ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றனர். அடுத்த கூட்டத்தில் விரிவாக பேசுவோம் என கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது கூட்டம் நடைபெறுகிறது. இதில் யார் யார் பங்கேற்கிறார்கள், என்ன செய்யப் போகிறார்கள் என்பது கூட்டம் நடைபெறும் போதுதான் தெரியவரும் என திருமாவளவன் தெரிவித்தார்.

Source: Read Full Article