தமிழ்நாட்டின் முதலமைச்சரான விஜய் சினிமாவில் நடிக்கும்போது தன்னுடைய பிறந்தநாளில் மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் போடுவது வழக்கமாக இருந்துள்ளது. அப்படியாக குஷி படம் ரிலீசான சமயத்தில் மதுரையில் உள்ள ராசாசி அரசு தலைமை மருத்துவமனையில் விஜய் தங்க மோதிரம் போடுவதாக திட்டமிடப்பட்டது. இதுதொடர்பாக விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், மதுரை மருத்துவமனை டீனிடம் போன் செய்து ஒருநாளைக்கு 33 குழந்தைகள் பிறப்பதாக விவரம் கேட்டறிந்தார். நிகழ்ச்சி நடைபெறும் நாளுக்கு முந்தைய நாள் 33 மோதிரத்தை வாங்கிக் கொண்டு நான் டீனை சந்தித்தால், அவர் 42 குழந்தைகள் பிறக்கும் என சொல்கிறார். எனக்கோ அதிர்ச்சியாக, நான் எஸ்.ஏ.சியை தொடர்புக் கொண்டு விஷயத்தைக் கூறினேன்.
அவர் மதுரையில் அப்போது ரசிகர் மன்ற தலைவருமான மேற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் தங்கப்பாண்டியிடம் வாங்க சொல்ல சொன்னார். அதற்கு முன்னால் விஜயிடம் தகவலை கூறுமாறு சொல்ல, நானும் தெரிவித்தேன். அவர் தங்கப்பாண்டியிடம் எதுவும் சொல்ல வேண்டாம். நானே பணம் கொடுக்கிறேன் என விஜய் கூறி விட்டார். அந்த சம்பவம் மிகப்பெரிய உணர்ச்சிவசமாக அமைந்தது.
காரணம் விஜய் ஒவ்வொரு குழந்தைக்கும் மோதிரம் போட்டு விட்டு வருகிறார். நானும் உடன் இருக்கிறேன். ஒரு 28 வயதுமிக்க அம்மாவிடம் வந்தார். அந்த பெண் கந்தலான ஆடை, கசங்கிய தலையுடனான தோற்றத்தில் காட்சியளித்தார். முகமெல்லாம் வாடிப்போய் கையில் குழந்தையை வைத்துக் கொண்டு விஜயைப் பார்த்தது. விஜய் குழந்தை விரலைப் பிடித்து மோதிரம் போடும்போது அந்தம்மா முகத்தை திருப்பி அழுது விட்டது. அந்த பெண்ணை அழைத்து உங்கள் குழந்தைக்கு வலிக்காமல் மோதிரம் போடுவேன். கவலைப்படாதீங்க என சொன்னார்.
ஆனால் அந்த பெண்ணோ, கண்ணீரை துடைத்துக் கொண்டு என் குழந்தைக்கு கை வலிக்கும் என அழவில்லை. என் கழுத்தில் இருக்கும் தாலி தங்கம் கிடையாது. மஞ்சள் கயிறு தான். பிறந்த குழந்தைக்கு தங்கம் போடுறீங்களே என அந்த பெண் குழந்தையோடு விஜய் காலில் விழுந்தார். அதைக் கண்டதும் அவரும் கண் கலங்கினார். நானும் கண் கலங்கி விட்டேன். இதை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் சொன்னேன். உடனே அவர் விஜய்க்கு அரசியல் ஆசை இருப்பதை சொன்னார் என ரவிராஜா அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராகி அதே அரசு மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த நிலையில் ரவி ராஜா அளித்த பேட்டி இணையத்தில் வைரலாகியுள்ளது.
Source: Read Full Article