அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை இன்று நண்பகல் 12 மணிக்கு, மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய். தாலிக்கு தங்கம் என்ற மனதிற்கு நெருக்கமான திட்டத்தை முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா கொண்டுவந்தபோது அதை எப்படி மனதார தமிழக மக்கள் கொண்டாடினார்களோ, அதே மாதிரியான ஒரு உணர்வோடுதான் தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை பார்க்கிறார்கள் இந்த தமிழ்நாட்டு பெண்கள்.

உயிர் இருக்கும் வரை நேசிக்கும் தாய் மாமன் உறவு

அதற்கு காரணம் உண்டு. அக்கா, தங்கச்சி என்று, உடன்பிறந்தவர்களை தன் உயிர் இருக்கும் வரையில் நேசித்து, அவர்களுக்கும் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் தன்னால் ஆன அனைத்து விஷயங்களை செய்துகொடுக்கும் ஒரு ஜீவன், தாய் மாமன். தன் குழந்தைகளுக்கு செய்யமுடியவில்லையென்றாலும் தன் உடன்பிறந்தாளின் குழந்தைகளுக்கு செய்துவிட வேண்டும் என்று பாச கங்ககனம் கட்டிக்கொள்பவன் அவன். அதனால்தான், தாய் மாமனை தாய்க்கு நிகராக நமது தமிழ் மரபு வைத்திருக்கிறது. அப்படி உணர்ச்சிபெருக்குள்ள ஒரு தொடர்பு தாய்மாமன் என்ற பெயருக்கும், அந்த சொந்தத்திற்கும் உண்டு. அப்படியான பெயரில், பிறக்கும் குழந்தைகளுக்கு முதல்வர் விஜய் அளிக்கவுள்ள தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் தமிழ்நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

இன்று தொடக்கம்...https://t.co/LRXU10pMDY | #TVKVijay‌ #CMJosephVijay‌ #ThaaimamanThangaMothiramThittam #madurai #TNNews #ABPnadu pic.twitter.com/pdvBFEyNtr

— ABP Nadu (@abpnadu) September 28, 2026

தாய்மாமன் உணர்வு என்பது ஒரு திருவிழா

காதுகுத்து, கல்யாணம், சடங்கு, முடி இறக்குறது, தீபாவளி, பொங்கல், நல்லநாள், பெரிய நாள் என அந்த குழந்தை பிறந்தது முதல் அத்தனை விசேஷங்களும் தாய்மாமன் இல்லாமல் நடைபெறாது. தாய்மாமன் இல்லாத விசேஷங்கள், விசேஷங்களாகவே இருக்காது. ஏனென்றால், தாய் மாமன் உறவு என்பது ஒரு திருவிழா மாதிரியான உணர்வு. தாய்மாமன் அருகே இருக்கும்போதுதான் அவன் தெய்வமாக நினைக்கும் அக்கா குழந்தையோ, தங்கச்சி பிள்ளையோ உற்சவர் மாதிரி வீதி உலா செல்கிறது. அப்படியான கொண்டாட்டங்களையும், கஷ்டங்களையும் பங்குப் போட்டுக்கொள்ளும் உன்னதமான உணர்வுதான் தாய்மாமன் உறவு.

அந்த தாய் மாமனாக முதல்வர் விஜய் தன்னை அறிவித்துக்கொண்டு, தமிழ்நாடு முழுவதும் இருக்கும் பெண்களின் அண்ணனாக, தம்பியாக பிறக்கும் குழந்தைக்கு சீர் செய்யும் விழாவாக தொடங்கவிருக்கிறது இந்த தாய்மாமன், தங்க மோதிரம் திட்டம்.

தாய் மாமனாக மாறிய முதல்வர் விஜய் - தங்க மோதிர திட்டம் வீடியோ

மதுரையில் நடக்கும் இன்னொரு குடமுழுக்கு

17ஆண்டுகளுக்கு பின்னர் நடந்து முடிந்திருக்கிறது மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் குடமுழுக்கு விழா. அந்த குடமுழுக்கிற்கு சற்றும் குறைவில்லாமல் இன்று தமிழ்நாடு அரசு சார்பில் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் என்ற இன்னொரு திருவிழாவை தாய்மாமனாக நின்று தொடங்கி வைக்கவிருக்கிறார். முதல்வர் ஜோசப் விஜய். தாய்மானம் சீருக்கு பேர் பெற்ற மதுரை மண்ணில் அவர் தொடங்கி வைக்கவிருக்கும் இந்த திட்டம், தமிழ்நாடு முழுவதும் உடனடியாக அமலுக்கு வரவுள்ளது. இனி அரசு ஆஸ்பத்திரியில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தை கையிலும் தாய்மாமன் சீராக ஜொலிக்கவிருக்கிறது தங்க மோதிரம்.

தமிழக முதல்வர் அண்ணன் விஜய் அவர்கள் இன்று துவங்கி வைக்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் உற்பத்தி தருணங்கள்.#CMJosephVijay‌ pic.twitter.com/ulPJJKQz0f

— CTR.Nirmalkumar (@CTR_Nirmalkumar) September 28, 2026

பாரதிராஜா இருந்திருந்தால்…

கிழக்கு சீமையிலே படத்தில் தங்கக் கொலுசை சீராக சுமந்து வருவார் தாய் மாமனான விஜயகுமார், இன்று நிஜத்தில் தங்க மோதிரத்தை சீராக சுமந்து வருகிறார் முதல்வர் விஜய். தாய்மாமன் உறவு குறித்து உணர்வுப்பூர்வமான படமெடுத்த இயக்குநர் இமயம் இன்று இருந்திருந்தால், முதல்வர் விஜயை உச்சி முகர்ந்து முத்தமிட்டிருப்பார்.

Source: Read Full Article