Tamilaga Makkal Kazhagam: TVKக்கு போட்டியாக TMK.. அஜித்துக்கே தெரியாமல் கட்சி தொடங்கிய ரசிகர்கள்.. இனி அதிரடி தான்!

Tamilaga Makkal Kazhagam: TVKக்கு போட்டியாக TMK.. அஜித்துக்கே தெரியாமல் கட்சி தொடங்கிய ரசிகர்கள்.. இனி அதிரடி தான்!
News Image

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமாருக்கே தெரியாமல் அவரது ரசிகர்கள் கட்சி தொடங்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கட்சிக்கு தமிழக மக்கள் கழகம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

விஜயின் வெற்றி - நடிகர்களின் அரசியல்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த விஜய், 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி ஆட்சியைப் பிடித்து முதலமைச்சராகி விட்டார். விஜயின் இந்த வெற்றி பல தமிழ் சினிமா பிரபலங்களை அரசியலுக்கு வர உத்வேகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் விஷால், தனுஷ் அரசியலுக்கு வர தயாராகி விட்டனர். அதேசமயம் அஜித்குமாரை அரசியலுக்கு பல காலமாக அழைத்து வரும் நிலையில் அவர் தனக்கு இது செட் ஆகாது என ஒதுங்கியே இருக்கிறார். மேலும் தன் உயிராக கருதும் கார் ரேஸில் பங்கெடுத்து வருகிறார். அவ்வப்போது சினிமாவில் படங்களில் நடிக்கிறார்.

தமிழக மக்கள் கழகம்

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எலவனாசூர்கோட்டை என்ற இடத்தில் அஜித்குமாரின் ரசிகர்கள் ஒன்று சேர்ந்து தொடங்கியுள்ள தமிழக மக்கள் கழகத்தின் கொடி மற்றும் கட்சியின் பெயர் அறிமுக விழா நடைபெற்றது.

இதுதொடர்பாக பேசிய தமிழக மக்கள் கழகத்தின் மாநில தலைவர், தமிழ்நாடு முழுவதும் உள்ள அஜித் ரசிகர்கள் ஒன்றிணைந்து இந்த கட்சியைத் தொடங்கியுள்ளோம். அஜித் அரசியலுக்கு வர வேண்டும் என நாங்கள் வேண்டுகிறோம். அவர் அரசியலுக்கு வருவதாகவோ, இந்த கட்சியை ஆரம்பிக்கவோ சொல்லவில்லை. ரசிகர்களாகிய நாங்கள் தான் ஆரம்பித்தோம். அதற்காக மாநில பொதுச்செயலாளர் என்ற இடத்தை காலியாக வைத்துள்ளோம். அஜித் அரசியலுக்கு வந்தால் அந்த இடத்தை சமர்பிப்போம். இல்லாவிட்டால் நாங்கள் தமிழ்நாடு முழுவதும் அஜித்தின் ரசிகர்களாக இருந்து பயணிப்போம்.

38 மாவட்டங்களில் உள்ள ரசிகர்களாகிய 5 மக்கள் ஒன்றுகூடி இந்த கட்சியில் இணைந்துள்ளனர். எங்களுக்குப் பிறகு புதிதாக அஜித்தின் பெயரை சொல்லி அவரது ரசிகர்கள் கட்சி ஆரம்பிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். ஒரு தாய் பிள்ளையாக தமிழக மக்கள் கழகம் என்ற பெயரில் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். 25,30 ஆண்டுகளாக ரசிகர்களாக இருந்து மக்களுக்கு என்ன செய்தோமோ, தற்போது அரசியல் கட்சி தொடங்கி அந்த சேவையை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் அரசியலில் களமிறங்கியுள்ளோம். மக்களுக்கு எந்த விதத்திலும், எந்த மதத்திலும் பாதிப்பு வராதவாறு நாங்கள் இந்த கட்சியை மாநில நிர்வாகிகள் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுவோம்.

தமிழக மக்கள் கழகத்தின் நோக்கம் மற்ற கட்சிகளை எதிர்ப்பதோ, அவதூறாக பரப்புவதோ, போட்டிப் போடவோ ஆரம்பிக்கவில்லை. இந்த கட்சியை ஆரம்பித்த நோக்கம் தமிழ்நாட்டு மக்களுக்கு பொதுச்சேவை செய்ய வேண்டும். அவர்கள் எந்த விதத்தில் பாதிக்கப்பட்டாலும் மாநில,மாவட்ட நிர்வாகிகள் அங்கு சென்று தொண்டு செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks