T N New Secretariat:பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகம் ரத்து; வேறு புது இடம் பரிசீலனை- இங்குதானா?

T N New Secretariat:பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகம் ரத்து; வேறு புது இடம் பரிசீலனை- இங்குதானா?
News Image

சென்னை, பட்டினப்பாக்கத்தில், புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய, முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளதாகவும் புதிய இடத்தைப் பரிசீலனை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

1,200 கோடி ரூபாய் மதிப்பில்

சென்னை, பட்டினப்பாக்கத்தில், வீட்டுவசதி, வருவாய், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 25.5 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு 1,200 கோடி ரூபாய் மதிப்பில், அனைத்து வசதிகளுடன், 20 லட்சம் சதுரஅடியில், புதிய தலைமைச் செயலகம் கட்ட, தமிழக அரசு முடிவெடுத்தது. இது குறித்த அரசாணை, கடந்த 8ஆம் தேதி பொதுத்துறை செயலர் சுந்தரவல்லி வாயிலாக வெளியிடப்பட்டது.

ஆனால், பட்டினப்பாக்கத்தில், புதிய தலைமைச் செயலகம் கட்டுவதால், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி, மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தி.மு.க., - அ.தி.மு.க., - இ.கம்யூ., - மா.கம்யூ., உட்பட பல்வேறு கட்சிகளும், திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன. புதிய தலைமைச் செயலக கட்டுமானத்தை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

கைவிட முதல்வர் முடிவு?

கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த இடத்தை கைவிட முதல்வர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அரசாணையை ரத்து செய்ய, பொதுத்துறை செயலருக்கு அவர் அறிவுறுத்தல் வழங்கி உள்ளார்.

அத்துடன் தலைமைச் செயலகத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய இடம் குறித்த விபரத்துடன், புதிய அரசாணை வெளியிட, அவர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பல்லவன் இல்லத்தில் புதிய தலைமை செயலகம்?

பட்டினப்பாக்கத்திற்கு மாற்றாக புதிய இடத்தை தேர்வு செய்வது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதற்கிடையே சென்னை பல்லவன் இல்லத்தில் ஏறக்குறைய 20 ஏக்கர் பரப்பளவில் புதிய தலைமை செயலகத்தை அமைப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டப்பேரவை தவிர்த்து பிற நிர்வாக கட்டிடங்களை பல்லவன் இல்லத்தில் கட்டுவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

கடலைப் பார்க்கும் வகையில் இடத்தேர்வு

சட்டப் பேரவை மட்டும் புனித ஜார்ஜ் கோட்டையில் தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கப்படும் எனவும் புதிய தலைமைச் செயலகக் கட்டிடத்தில் இருந்து வங்கக் கடலைப் பார்க்கும் வகையில் இடத்தேர்வு இருக்க வேண்டும் என முதலமைச்சர் விரும்புவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பல்லவன் இல்லத்தில் மாநகர் போக்குவரத்து கழகம், விரைவு போக்குவரத்து கழகம் ஆகியவற்றின் பணிமனைகள் அமைந்துள்ள நிலையில், போக்குவரத்து பணிமனைகளுக்கு மாற்று இடம் வழங்கி பல்லவன் இல்லம் வளாகத்தில் புதிய தலைமை செயலகம் அமைப்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறதாம்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks