விநாயகர் சதுர்த்தி விடுமுறை

விநாயகர் சதுர்த்தியை பண்டிகையையொட்டி தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைத்ததால் சென்னையில் இருந்து மட்டுமல்லாமல் பல ஊர்களில் இருந்தும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். தற்போது விடுமுறை முடிந்து திரும்பி வர திட்டமிட்ட நிலையில், அனைத்து ரயில்களிலும் முன்பதிவு முடிவடைந்துள்ளது. ஆம்னி பேருந்து கட்டணமும் பல மடங்கு உள்ளது. இந்த நிலையில் குறைந்த கட்டத்தில் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு திரும்ப சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னைக்கு திரும்ப சிறப்பு ரயில்

பயணிகளின் கூடுதல் நெரிசலைச் சமாளிக்கும் வகையில், நாகர்கோவில் சந்திப்பில் இருந்து தாம்பரத்திற்கு ஒருவழி சிறப்பு சூப்பர்பாஸ்ட் ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. (ரயில் எண் 06050)நாகர்கோவில் – தாம்பரம் ஒருவழி சிறப்பு சூப்பர்பாஸ்ட் ரயில், இன்று (செப்டம்பர் 14-ஆம் தேதி) இரவு 11 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பில் இருந்து புறப்படும். மறுநாள் காலை 10.45 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவிலில் இருந்து சிறப்பு ரயில்

இந்த ரயில் ஒரு சேவையாக மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயிலில் 15 ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள், 3 சேர் கார் பெட்டிகள் மற்றும் 2 லக்கேஜ் மற்றும் பிரேக் வேன் பெட்டிகள் இடம்பெறும். ரயில் வழித்தடத்தில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை தாம்பரம் வரை பயணிக்கும் இந்த ரயில், பண்டிகை காலத்தில் சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் பயணிகளுக்கு கூடுதல் போக்குவரத்து வசதியை வழங்கும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு செப்டம்பர் 14-காலையில் தொடங்கியுள்ளது.

மானாமதுரையில் இருந்து மெமு ரயில்

இதே போல தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள மற்றொரு அறிவிப்பில், மானாமதுரையில் இருந்து தாம்பரத்திற்கு ஒரு வழி முன்பதிவில்லா மெமு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் எண் 06192 மானாமதுரை–தாம்பரம் ஒரு வழி முன்பதிவில்லா மெமு சிறப்பு ரயில், செப்டம்பர் 14-ஆம் தேதி திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு மானாமதுரையில் இருந்து புறப்பட்டு, அதே நாளில் இரவு 11.55 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் ஒரே ஒரு சேவையாக இயக்கப்படுகிறது. மொத்தம் 12 பெட்டிகளைக் கொண்ட மெமு ரயிலாக இது இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெமு ரயில் எந்த ரயில் நிலையங்களில் நிற்கும்

மானாமதுரையில் இருந்து புறப்படும் இந்த மெமு சிறப்பு ரயில், திருப்புவனம், மதுரை, சோழவந்தான், கொடைரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனவும், இரவு 11.55 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source: Read Full Article