தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியைப் பெற்றுள்ளது. பெண்கள் பாதுகாப்பை முன்னெடுத்து ஆட்சியை பெரும் பரப்புரையை மேற்கொண்ட விஜய், தவெக ஆட்சிக்கு வந்தவுடன் சிங்கப்பெண் சிறப்பு படையைத் தொடங்கினார்.

சிங்கப்பெண் சிறப்பு படை சாதனைகள்:

சிங்கப்பெண் சிறப்பு படையைத் தொடங்கி 100 நாட்கள் ஆகியுள்ள நிலையில், அந்த படையின் சாதனையை தவெக பட்டியலிட்டுள்ளது.

1. 4 ஆயிரத்து 231 புகார்களுக்கு சம்பவ இடத்திற்குச் சென்று நடவடிக்கை

2. 58 பெணகள், 94 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்ட மீட்பு

3. 111 பாதிப்புக்குள்ளாகும் நபர்கள் மீட்பு

4. 54 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

5. 636 பள்ளி இடைநிறுத்த மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர உதவி

6. 334 குற்ற வழக்குகள் பதிவு செய்ய முக்கிய பங்களிப்பு

7. கல்வி நிறுவனங்களில் 14 ஆயிரத்து 231 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

8. பிற பொது இடங்களில் 34 ஆயிரத்து 632 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

9. புலம்பெயர் தொழிலாளர்களிடையே 2 ஆயிரத்து 236 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

10. மாநிலம் முழுவதும் 15 லட்சத்து 77 ஆயிரத்து 460 பாதிப்புக்குள்ளாகும் இடங்கள் தொடர்ந்து கண்காணிப்பு

11. 70 களப்பிரிவுகள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தொடர் ரோந்து:

இந்த சாதனைகள் அனைத்தும் சிங்கப்பெண் சிறப்பு படைகள் சாதனைகள் என்று தவெக பட்டியலிட்டுள்ளது. தவெக அரசு பெண்கள் பாதுகாப்பை மிகப்பெரிய அளவில் கையில் எடுத்துச் செயல்பட்டு வருகிறது. இதன் எதிரொலியாக கடந்த திமுக ஆட்சியில் சிறுமிகள் பாலியல் வன்புணர்வு வழக்கு விவகாரத்தில் சிக்கிய ஜெம் வீரமணி வழக்கையும் கையில் எடுத்துள்ளது.

பல இடங்களில் சிங்கப்பெண் சிறப்பு படை தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது.

Source: Read Full Article