வடகிழக்கு இந்தியாவில் தவிர்க்க முடியாத மாநிலமாக திகழ்வது சிக்கிம். மலைகள் சூழ்ந்த இந்த சிக்கிம் மாநிலத்தில் அமைந்துள்ளது யுக்சோம் - தாஷிடிங் தொகுதி. இந்த தொகுதிக்குட்பட்ட பகுதி ரிம்பி மலைக்கிராமம்.

பெரும் நிலச்சரிவு:

கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வந்தது. இந்த நிலையில், நேற்று இரவு இங்கு மழையுடன் சேர்த்து திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் மலைப்பகுதியில் இருந்த மண், பாறைகள் மற்றும் மரங்கள் ஆகியவை சரிந்து கீழே உள்ள பகுதி முழுவதும் ஆக்கிரமித்துள்ளது.

இந்த நிலச்சரிவில் ரிம்பி கிராமத்தில் இருந்த ஏராளமான வீடுகள் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. பல வீடுகள் மண்ணில் புதைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த கடுமையான நிலச்சரிவிற்கு மத்தியில் சிக்கிமில் பல்வேறு பகுதிகளில் பனி மழை பெய்து வருகிறது. தற்போது நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள ரிம்பி கிராமத்திற்கு பேரிடர் மீட்பு படையினர் சென்றுள்ளனர். அவர்கள் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

#WATCH | Sikkim | A fresh landslide in Rimbi Village under the Yuksom-Tashiding Constituency of West Sikkim triggered a mudslide, with large amounts of mud, rocks and debris moving downhill. This has raised concerns among residents amid continued rainfall, with nearby houses,… pic.twitter.com/FZsHQ8wCVd

— ANI (@ANI) September 24, 2026

உயிரிழப்பா?

இந்த சம்பவத்தில் தற்போது வரை உயிரிழப்புகள் ஏதும் ஏற்பட்டுள்ளதா? என்று தகவல்கள் வெளியாகவில்லை. பனிப்பொழிவு, மழைப்பொழிவு இருப்பதால் மீட்பு பணிகளில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் பெரும் வேதனையில் சிக்கிம் மாநில மக்கள் ஆழ்ந்துள்ளனர்.

கியால்ஷிங் மாவட்டத்தில் உள்ள ரிம்பி கிராமத்தில் 128 மக்கள் வசித்து வருகின்றனர். சிக்கிமில் பல்வேறு பகுதிகளும் நிலச்சரிவு அபாயத்தில் உள்ளது. கடந்த வாரம் தடாங் பகுதியில் உள்ள லிங்டிங் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது சில வீடுகளின் உள்ளே மண், மழைநீர் உள்ளே புகுந்தது. தொடர்ந்து சிக்கிமில் இதுபோன்ற நிலச்சரிவு ஏற்பட்டு வரும் நிலையில், பேரிடர் மீட்பு படையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருருகின்றனர்.

Source: Read Full Article