இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா அடுத்தாண்டு உலகக்கோப்பை வரை அதிகபட்சமாக விளையாடுவார்கள். இதையடுத்து, இந்திய அணியின் எதிர்காலமாக உருவெடுத்து வருபவர் சுப்மன்கில்.

சுப்மன்கில் கேப்டன்சி:

ரோகித் சர்மாவிடம் இருந்து இவரிடம் கேப்டன்சியை பறிகொடுத்த நிலையில், புதியதாக கேப்டன்சி சுப்மன்கில்லிடம் இந்திய அணி நிர்வாகம் வழங்கியது. இவரிடம் ஒருநாள் போட்டி கேப்டன்சியை வழங்கியபோது கடும் எதிர்ப்பு கிளம்பியது.

ஆனால், விமர்சனங்களுக்கு பதிலடி தரும் வகையில் சுப்மன்கில் அற்புதமான வகையில் இந்திய அணியை வழிநடத்தி வருகிறார். கேப்டனாக அவர் பொறுப்பேற்றது முதலே டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவர் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.

அடுத்த கோலி:

இந்திய அணியின் அடுத்த கோலி என்று வர்ணிக்கப்படும் சுப்மன்கில் கேப்டனாக பொறுப்பு வழங்கப்பட்டது முதலே தனது பேட்டிங்கை மேலும் மெருகேற்றி உள்ளார். சமீபகாலமாக அவரது பேட்டிங் இந்திய அணிக்கு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. இந்திய அணியின் டாப் ஆர்டராக விராட் கோலி, ரோகித் சர்மாவுடன் இணைந்து இந்திய அணியை அவர் திறம்பட கட்டமைத்து வருகிறார்.

விராட் கோலியின் பல்வேறு சாதனைகளை முறியடித்து வரும் நிலையில், சுப்மன் கில் தனது 27 வயதிலே இதுவரை 43 டெஸ்ட் போட்டிகளில் 3 ஆயிரத்து 43 ரன்களும், 68 ஒருநாள் போட்டிகளில் 3 ஆயிரத்து 489 ரன்களும் எடுத்துள்ளார். தற்போது டி20 போட்டிகளில் அவர் ஓரங்கட்டப்பட்டு வரும் நிலையில், அவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் இந்திய அணியை வழிநடத்தி வருகிறார்.

டெஸ்ட் போட்டிகளில் 11 சதங்களும், 1 இரட்டைசதமும், ஒருநாள் போட்டிகளில் 10 சதங்களும், 1 இரட்டை சதமும் விளாசியுள்ளார். வரும் உலகக்கோப்பையில் முதல்முறையாக இந்திய அணியை வழிநடத்த உள்ள சுப்மன்கில் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நோக்கில் இந்திய அணியை வழிநடத்தி வருகிறார்.

வெற்றி சதவீதம்:

ஒருநாள் போட்டியில் இந்திய அணியை வழிநடத்தி வரும் சுப்மன்கில் வெற்றி சதவீதம் 50 முதல் 58 சதவீதம் வரை அமைந்துள்ளது. இந்திய அணியை அவர் திறம்பட வழிநடத்தி வரும் சுப்மன் கில்லிற்கு ஜாம்பவான் வீரர்களும், முன்னாள் கேப்டன்களுமாகிய விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் பெரும் பக்கபலமாக உள்ளனர். இவர்களின் ஒத்துழைப்பாலும், பும்ரா, சிராஜ் போன்ற அனுபவமிக்க பந்துவீச்சாளர்களின் பங்களிப்பாலும் சுப்மன்கில் அணியை திறம்பட வழிநடத்துவார் என்று கருதப்படுகிறது.

Source: Read Full Article