Senthil Balaji DMK : தாராபுரத்தை தட்டி தூக்க தயாராகும் திமுக.! மாஸ்டர் பிளான் போட்ட செந்தில் பாலாஜி- களத்தில் நடப்பது என்ன.?

Senthil Balaji DMK : தாராபுரத்தை தட்டி தூக்க தயாராகும் திமுக.! மாஸ்டர் பிளான் போட்ட செந்தில் பாலாஜி- களத்தில் நடப்பது என்ன.?
News Image

ஆட்சி பிடித்த தவெக- பல்டி அடித்த எம்எல்ஏக்கள்

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை இழந்த நிலையில், விஜய் தலைமையிலான தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதனையடுத்து திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக தவெக அணிக்கு பல்டி அடித்தது. இதற்கிடேயே ஆட்சியை பிடிப்போம், அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த அக்கட்சியில் இருந்து வெற்றி பெற்ற எம்எல்ஏக்களில் ஒரு பிரிவினர் தவெகவிற்கு ஆதரவு அளித்தனர். அடுத்தாக தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர்.

2 தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு

இதன் காரணமாக அதிமுகவின் 6 எம்எல்ஏக்கள் தொகுதியும், முதலமைச்சர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த 7 தொகுதிக்கும் இடைத்தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் வழக்கு காரணமாக 5 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தடை விதிக்கப்பட்டது. மீதமுள்ள 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதியை கைப்பற்ற தவெக, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

சூடு பிடிக்கும் தேர்தல் களம்

இதில் தாராபுரத்தில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்று வெறும் 20 நாட்களில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த சத்யபாமாவிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனை பயன்படுத்தி அந்த இடத்தை கைப்பற்ற திமுகவும் அதிமுகவும் போட்டியிட்டு வருகிறது. அந்த வகையில் தாராபுரத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிர களப்பணியில் இறங்கியுள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக, தவெகவிற்கு விழுந்த ஓட்டுகளை திமுகவுக்கு திருப்புகிற வேலைய செந்தில்பாலாஜியிடம் திமுக தலைமை ஒப்படைத்துள்ளது. அந்த வகையில் குண்டடம் பகுதியில் உள்ள 68 பூத்தில் உள்ள கண்ரோலை கையில் எடுத்துள்ளார் செந்தில் பாலாஜி,

திமுக வாக்கு - செந்தில் பாலாஜி பிளான் என்ன.?

கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது தாராபுரம் தொகுதியில் குண்டடம் பகுதியில் இருந்து வாக்குகளை எண்ணும் பணியானது தொடங்கியது. இதில் மூன்றாவது சுற்றின் போது அதிமுக குறைந்தது 6000 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தது. அடுத்தாக தாராபுரம் பகுதி வாக்கு எண்ணிக்கையின் போது அதிமுக 2000 முதல் 3000 ஓட்டு என முன்னிலை குறைந்த நிலையில், கடைசியாக மூலனூர் பகுதி வாக்கு எண்ணிக்கையின் போது  எல்லா லீடிங்கும் குறைஞ்சு திமுக 5000 ஓட்டு முன்னிலை எடுத்து திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.

கடந்த 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போதும் அதிமுக வேட்பாளர்  சத்தியபாமாவும் இதே முன்னிலையில் இருந்தார்.  ஆனால், திமுக ஓட்டில் பாதி விசிலுக்கு மாறியது. இதனால்  தவெக வாங்குன 46  ஓட்டில் 30 ஆயிரம் ஓட்டுக்கு மேல திமுக ஓட்டுதான் என கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 4 மாத தவெக ஆட்சியில் களம் வேற நிலைக்கு மாறியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே  அதிமுக தவெக ஓட்டுக்களை திமுகவுக்கு திருப்புற வேலையை செந்தில்பாலாஜி கையில் திமுக தலைமை ஒப்படைத்துள்ளது.

களத்தில் திமுக மாஜி அமைச்சர்கள்

இது மட்டுமில்லாமல் திமுக முன்னாள் அமைச்சர்களான சக்கரபாணிக்கு 48 வாக்குச்சாவடியும், நேருவுக்கு 40 வாக்கு சாவடியும், அன்பில் மகேஷ்க்கு 25 வாக்குச்சாவடியும், ஐ. பெரியசாமிக்கு 40 வாக்குச்சாவடி என பிரித்து வழங்கப்பட்டு களப்பணியை திமுக தீவிரப்படுத்தியுள்ளது.  எனவே தாராபுரம் தொகுதியை தட்டி தூக்கி தவெகவின் தலைமைக்கு செக் வைக்க திமுக திட்டமிட்டுள்ளது. எனவே தேர்தல் முடிவை பொறுத்து தமிழக அரசியலில் பல வித மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பும் உள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks