Rohit Gill IND Vs WI: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் கேப்டன் கில் 62 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார்.

ரோகித் - கில் கூட்டணி அபாரம்

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெறுகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி கேம்ப்பெல், சாய் ஹோப் மற்றும் அமீர் ஜாங்கோ ஆகியோரின் சதங்களால், 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 405 ரன்களை குவித்தது. இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, இதுவரை இல்லாத வகையில் 400+ ரன்கள் என்ற இலக்கை முதல்முறையாடி எட்டிபிடிக்குமா? என பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அதனை பூர்த்தி செய்யும் வகையில் கேப்டன் கில் மற்றும் மூத்த வீரரான ரோகித் சர்மா ஆகியோர் அதிரடியாக விளையாடி இந்திய அணிக்கு மிகவும் வலுவான அடித்தளத்தை அமைத்து தந்தனர்.

இதையும் படியுங்கள்: Seeman Speech: ”நான் படத்துக்கே போறன் போங்கடா. தம்பி சிவகார்த்திகேயன் வர சொல்றாரு" சீமான் திடீர் முடிவு

255 ரன்கள் பார்ட்னர்ஷிப் - 3 ரன்களில் மிஸ் ஆன சாதனை

முதலில் அதிரடியாக ஆடி ரோகித் சர்மா அரைசதம் கடந்த நிலையில், கில் நிதானமாக ஆடி வந்தார். அதன் பிறகு வேகமெடுத்த அவர் 62 பந்துகளிலேயே சதம் விளாசி அசத்தினார். அதன்பிறகும் வேகம் குறையாமல் மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். இதனால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. மறுபுறம் ரோகித் சர்மாவும் ஒருநாள் போட்டிகளில் தனது 35வது சதத்தை பதிவு செய்து, 101 ரன்கள் எடுத்து இருந்தபோது ஆட்டமிழந்தார். இதனால் இந்த கூட்டணி முதல் விக்கெட்டிற்கு 26.2 ஓவர்களிலேயே 255 ரன்களை சேர்த்து கொடுத்தது. இதனால் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக முதல் விக்கெட்டிற்கு அதிக ரன்களை சேர்த்து தந்த ஜோடி என்ற சாதனையை, வெறும் 3 ரன்களில் சச்சின் மற்றும் கங்குலியிடம் இருந்து பறிக்கும் வாய்ப்பை தவறவிட்டது.

மலைபோல் குவிந்த சாதனைகள்

ஒருநாள் போட்டிகளில் குறைந்த பந்துகளை எதிர்கொண்டு 12 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் கோலிக்கு அடுத்தபடியாக இரண்டாவது வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா (12,973) படைத்துள்ளார்

குறைந்த இன்னிங்ஸ்களில் 12 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனை பட்டியலிலும் 282 இன்னிங்ஸ்களுடன் கோலிக்கு அடுத்தபடியாக ரோகித் இடம்பெற்றுள்ளார்

ஒருநாள் போட்டிகளில் 12 ஆயிரம் ரன்களை கடந்த 7வது வீரர் ரோகித் சர்மா

மிகக் குறைந்த பந்துகளில் ஒருநாள் போட்டிகளில் சதமடித்த கேப்டன் என்ற ரோகித் சர்மாவின் (63 பந்துகள்) சாதனையை இன்றைய போட்டியில் கில் (62 பந்துகள்) தகர்த்துள்ளார்

முன்னதாக பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா (1998), இந்தியா - ஆஸ்திரேலியா (2013), பாகிஸ்தான் - இலங்கை (2023) போட்டிகளில் தலா நான்கு சதங்கள் அடிக்கப்பட்டதே சாதனையாக இருந்த நிலையில், இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான போட்டியில் 5 சதங்கள் விளாசப்பட்டுள்ளன

இதனிடையே, இந்திய அணி 35 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்களை சேர்த்துள்ளது. வெற்றிக்கு 90 பந்துகளில் 67 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. கேப்டன் கில் 182 ரன்களுடனும், கெய்க்வாட் 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Source: Read Full Article