ஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ், RC புக்.! அரசின் அசத்தல் அறிவிப்பு- Download செய்வது எப்படி.? இதோ வழிமுறை

ஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ், RC புக்.! அரசின் அசத்தல் அறிவிப்பு- Download செய்வது எப்படி.? இதோ வழிமுறை
News Image

டிஜிட்டல் வசதி அறிமுகம்

நவ நாகரீக காலத்திற்கு ஏற்ப அனைத்து துறைகளும் நவீன மயமாகி டிஜிட்டல் முறையில் மாறி வருகிறது. இந்த நிலையில் வாகனப் பதிவுச்சான்று, ஒட்டுநர் உரிமம் ஆகியவை டிஜிட்டல் முறையில் வழங்குவது தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெளிப்படையான நிர்வாகத்தை உறுதிசெய்வதுடன், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் எளிமையான முறையில் மக்களைச் சென்றடையும் வகையில் தொடர்ந்து நிருவாகச் சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. தற்போது, தமிழ்நாட்டில் ஒட்டுநர் உரிமம் (Driving License) மற்றும் வாகனப் பதிவுச்சான்று (Registration Certificate) பெறுவதற்குக் கட்டணமாக 250 ரூபாய் விண்ணப்பதாரர்களால் செலுத்தப்பட்டு, சிப் (Chip) தபால் மூலம் விண்ணப்பதாரர்களின் முகவரிக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

செப்டம்பர் 15 முதல் ஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ்

இதனால் பொருத்தப்பட்ட அட்டைகளாக விண்ணப்பதாரர்களுக்குக் கிடைப்பதற்கு ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை காலதாமதம் ஏற்படுகிறது. இந்தக் காலதாமதத்தினால் பொதுமக்களுக்குப் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. இந்த காலதாமதத்தினைத் தவிர்க்கும் வகையில், ஓட்டுநர் உரிமம் (Driving License) (Registration Certificate) ஆகியவை Digital முறையில் பொதுமக்கள் தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளும் நடைமுறை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்படும். மாநிலம் முழுவதும் 15.09.2026 முதல், ஓட்டுநர் உரிமங்கள் (Driving Licences) மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ்கள் (Registration Certificates) டிஜிட்டல் முறையில், அதாவது Digital Driving License மற்றும் Digital Registration Certificate வழங்கும் வசதி ஏற்படுத்தப்படும்.

ஒரே நாளில் ஓட்டுநர் உரிமம் டிஜிட்டலில்

மின்னணு வாகனப் பதிவுச்சான்றிதழ் முறை (Digital RC) அறிமுகம் செய்வதன்மூலம், புதிய வாகனம் வாங்குவோர், வாகனப் பதிவை அதாவது, Digital RC-யை இணையம் வழியாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதேபோன்று ஓட்டுநர் தேர்வில் (Driving Test) தேர்ச்சிபெற்ற விண்ணப்பதாரர்களுக்கு, அன்றைய தினமே ஓட்டுநர் உரிமம் டிஜிட்டல் முறையில் வழங்கப்படும். அரசு அலுவலகங்கள் மற்றும் பிற அதிகாரப்பூர்வ அமைப்புகள் QR code-ஐ scan செய்து மின்னணு முறையில் ஆவணங்களைச் சரிபார்க்க முடியும். இதன்மூலம் போலி ஆவணங்கள் தவிர்க்கப்படும்.

செப்டம்பர் 15 முதல் டவுன்லோடு செய்யலாம்

இந்த முறையினால், ஆவணம் தொலைந்தாலோ, சேதமடைந்தாலோ மீண்டும் பதிவிறக்கம் செய்துகொள்ளவும், அச்சிட்டுக்கொள்ளவும் முடியும். ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கும், வாகனத்தைப் பதிவு செய்வதற்கும், வாகனப்பதிவு புதுப்பித்தல் மற்றும் படிப்படியாக போக்குவரத்து சம்பந்தமான அனைத்து அலுவலக சேவைகளுக்கும் தமிழ்நாட்டில் எந்தவொரு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திலும் விண்ணப்பித்து "Anywhere Registration / Licensing" நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே செப்டம்பர் 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ள திட்டத்தில் இணையதள முகவரி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. அதில் இருந்து தங்களுக்கு தேவையான ஒட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச்சான்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks