Ration Card : ரேஷன் கார்டுதாரர்களே உஷார்.! பெயரை நீக்கப்போறாங்க.. இன்று இந்த சூப்பர் வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க

Ration Card : ரேஷன் கார்டுதாரர்களே உஷார்.! பெயரை நீக்கப்போறாங்க.. இன்று இந்த சூப்பர் வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க
News Image

ரேஷன் கடையில் உணவுப்பொருட்கள்

ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் இலவசமாகவும், மானிய விலையிலும் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சுமார் 2 கோடிக்கும் மேலான குடும்ப அட்டைகள் மூலம் அரசி, சக்கரை,பருப்பு, கோதுமை,பாமாயில் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ஒரு சில இடங்களில் போலியான பெயர்களை ரேஷன் கார்டுகளில் சேர்த்து உணவுப்பொருட்கள் கள்ளத்தனமாக வாங்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனை தடுக்கும் வகையில், ரேஷன் கார்டில் பெயர் உள்ளவர்கள் ஆதார் கார்டில் பதிவு செய்யப்பட்ட கை விரல் ரேகையை பதிவு செய்யுமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அந்த வகையில் கடந்த ஒரு வருடங்களுக்கும் மேலாக  கை விரல் ரேகையானது பதிவு செய்யப்பட்டு வருகிறது. இருந்த போதும் இன்னும் பலர் தங்களது கை விரல் பதிவு செய்யாத காரணத்தால் ரேஷன் கார்டில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கை விரல் ரேகை கட்டாயம்

இந்த நிலையில் ரேஷன் கார்டில் கை விரல் ரேகையை பதிவு செய்ய இன்று சிறப்பு ஏற்பாட்டை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன்படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களை சரிபார்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் கை ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை (eKYC) மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு முகாம்

அதன் படி குடும்ப உறுப்பினர்களுக்கு எவ்வித இடையூறுமின்றி இப்பணியினை செய்திட அறிவுறுத்தப்பட்டு கடந்த அக்டோபர் 2023 முதல் குடும்ப உறுப்பினர்களின்_கை ரேகை சரிபார்ப்பு (eKYC) பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 96.57% eKYC பணியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த eKYC பதிவினை 100% நிறைவு செய்யும் பொருட்டு இன்று (26.09.2026) அன்று தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் (இடைதேர்தல் நடைபெறவிருக்கும் மதுராந்தகம், தாராபுரம் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளைத் தவிர்த்து) சிறப்பு முகாம் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.

இன்றைய வாய்ப்பை மிஸ் செய்யாதீங்க

எனவே, இதுவரை, நியாய விலைக் கடைகள் மூலம் கைரேகைப் பதிவு (eKYC) மேற்கொள்ளாமல் விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் இன்றைய தினம் (26.09.2026) நடைபெறவுள்ள இச் சிறப்பு முகாமினை பயன்படுத்தி தங்களது கைரேகைப் பதிவினை (eKYC) மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks