ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் மத்திய, மாநில அரசு சார்பாக நியாயவிலைக்கடைகளில் இலவசமாகவும், மானிய விலையிலும் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் சுமார் 20.4 கோடி ரேஷன் கார்டுகள் மூலம் 80.5 கோடி மக்கள் உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகிறார்கள். அந்த வகையில் அரிசி, பருப்பு, சக்கரை, பாமாயில், கோதுமை உள்ளிட்ட உணவுகள் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசின் சார்பாக வழங்கப்படும் உணவுப்பொருட்கள் சரியான நபர்களை சென்று சேரும் வகையில் பல்வேறு ஆய்வுகளை அரசு அவ்வப்போது நடத்தி வருகிறது.

இதன் படி, தகுதியானர்வர்களுக்கு தொடர்ந்து பலன் கிடைக்கும் வகையில், பயனாளிகளின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒரே நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட கார்டுகளில் பெயர் இடம்பெறுவது. இரண்டுக்கும் மேற்பட்ட போலி ரேஷன் கார்டுகள் வைத்திருப்பது, இறந்தவர்களின் பெயர்களை ரேஷன் அட்டையில் இடம்பெறுவதால் போலியான நபர்கள் பயனடைந்து வரும் நிலை நீடித்து வருகிறது. இதனால் தகுந்த பயனாளிகளுக்கு உணவுப்பொருட்கள் உரிய முறையில் கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதனை சரி செய்யும் வகையில் ரேஷன் கார்டில் உள்ளவர்கள் பெயர்களை உறுதி செய்யும் வகையில் கைவிரல் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே கைவிரல் ரேகையை பதிவு செய்யாதவர்களின் பெயர்கள் ரேஷன் கார்டில் இருந்து நீக்கப்படும் என அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

இதற்காக நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் கை விரல் பதிவு செய்ய சிறப்பு முகாமும் நடைபெற்றது. தற்போது வரை நாடு முழுவதும் 90.64 சதவிகிதம் பேர் தங்களது கை விரல் ரேகையை பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக ரேஷன் பொருட்கள் வாங்காத ரேஷன் கார்டுகள் முடக்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் 1 கோடியே 58 லட்சம் பயனாளிகளின் சலுகைகள் அக்டோபர் 1ஆம் தேதி நாளை முதல் முடக்கம் செய்யப்படவுள்ளது.

இதில் முதல் கட்டமாக 6 மாதமாக உணவுப்பொருட்கள் வாங்காத ரேஷன் கார்டுகள் நாளை முதல் தற்காலிக முடக்கம் செய்யப்படவுள்ளது. இந்த கால கட்டத்தில் உணவுப்பொருட்கள் விநியோகம் செய்யப்படுவது நிறுத்தி வைக்கப்படும். மேலும் சம்பந்தப்பட்ட கார்டுகளின் தங்களது தகுதியை உறுதி செய்ய 3 மாத கால அவகாசம் வழங்கப்படவுள்ளது இந்த காலத்திற்கு தங்களது eKYC முடிக்க வேண்டும். இதில் கள ஆய்வு நடத்தி தகுதி உறுதி செய்யப்பட்டால் ரேஷன் கார்டுகள் மீண்டும் விநியோகாம் செய்யப்படும். அரசின் சலுகைகளை தொடர்ந்து பெற முடியும்.

Source: Read Full Article