ரேஷன் கார்டும் அடையாள ஆவணமும்

ரேஷன் காரட்டு உணவுப்பொருட்களை வாங்குவதற்காக அட்டையாக மட்டுமில்லாமல் அடையாள ஆவணமாகவே உள்ளது. அந்த வகையில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல் திருத்தம் செய்தல், மொபைல் எண்கள் மாற்ற சிறப்பு முகாம் தொர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் ரேஷன் கார்டில் இருப்பவர்களின் விவரங்களை சரிபார்க்கும் வகையில் கைவிரல் ரேகை பதிவும் கட்டயாமாக்கப்பட்டுள்ளது. கை விரல் ரேகை பதிவு செய்யாதவர்களின் பெயர்கள் குடும்ப அட்டையில் இருந்தும் நீக்கப்படவுள்ளது. இதனையடுத்து இதற்கும் சிறப்பு முகாம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டு- சிறப்பு முகாம்

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகின்ற 19.09.2026 அன்று பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம்பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் பிரதி மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி செப்டம்பர் 2026 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் வரும் சனிக்கிழமை 19.09.2026 அன்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம். கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும். பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சேவைகள் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்களில் பெறப்படும் கடவுச்சொல் வழியாக (OTP) மட்டுமே மேற்கொள்ளப்படும் என்பதால் குடும்ப அட்டைதாரர்கள் பதிவு செய்யப்பட்ட கைபேசியுடன் மண்டல அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.

ரேஷன் கார்டு-eKYC சிறப்பு முகாம்

இதே போல தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் 19.09.2026 அன்று நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள மற்றொரு அறிக்கையில், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன் படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களை சரிபார்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் விரல் ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை (eKYC) மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன் படி குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதும் இடையூறுமின்றி இப்பணியினை செய்திட அறிவுறுத்தப்பட்டு கடந்த அக்டோபர் 2023 முதல் குடும்ப உறுப்பினர்களின் விரல் ரேகை சரிபார்ப்பு (eKYC) பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 96.48% eKYC பணியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

செப்டம்பர் 19ஆம் தேதி சிறப்பு முகாம்

இந்த eKYC பதிவினை 100% நிறைவு செய்யும் பொருட்டு 19.09.2026 அன்று தமிழகத்திலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் (இடைதேர்தல் நடைபெறவிருக்கும் மதுராந்தகம், தாராபுரம் பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளை தவிர்த்து) சிறப்பு முகாம் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது. எனவே, இன்று வரை, நியாய விலைக் கடைகள் மூலம் கைரேகை பதிவு (eKYC) செய்யப்படாமல் விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் 19.09.2026 அன்று மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் நடைபெறும் சிறப்பு முகாமினை பயன்படுத்தி தங்களது கைரேகைப் பதிவினை (eKYC பதிவினை) மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source: Read Full Article