ரயில் டிக்கெட் புக்கிங் செய்யும் மக்களுக்கு முக்கியமான அறிவிப்பு வந்துள்ளது. RailOne செயலியில் சீசன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான விதிகள் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி, பதிவுசெய்யப்பட்ட பயனர் ஒருவர், தனக்கு மட்டுமிம்மாலம் கூடுதலாக 5 பயணிகள் வரையிலும் சீசன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். உங்கள் குடும்பத்தினர் அல்லது பிற பயணிகளுக்காக டிக்கெட் முன்பதிவு செய்யத் திட்டமிட்டிருந்தால் வயது வரம்பு, டிக்கெட் செல்லுபடியாகும் காலம் மற்றும் QR குறியீடுகள் தொடர்பான இந்த விதிமுறைகள் பற்றி தெரிந்துகொள்வது அவசியம். இந்த புதிய வசதி செப்டம்பர் 9ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம் பயணிகள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதிலிருந்து பெரும் நிவாரணம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரயில் பயணிகளுக்காக RailOne செயலியின் சீசன் டிக்கெட் முன்பதிவு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. பதிவுசெய்யப்பட்ட பயனர் ஒருவர் தனக்கும், கூடுதலாக ஐந்து பயணிகள் வரையிலும் சீசன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இது குடும்பத்தினருக்கோ அல்லது குழுவாகப் பயணிப்பவர்களுக்கோ டிக்கெட் ஏற்பாடு செய்வதை எளிதாக்கும் என்று கூறப்பட்டுள்ளது.நீங்கள் உங்களுக்காக டிக்கெட் முன்பதிவு செய்கிறீர்கள் என்றால், உங்கள் குறைந்தபட்ச வயது 18 ஆக இருக்க வேண்டும். மேலும் அந்த டிக்கெட் முன்பதிவு செய்த நாளிலிருந்தே செல்லுபடியாகும். அதே சமயம், மற்றொரு பயணியருக்காக நீங்கள் டிக்கெட் முன்பதிவு செய்கிறீர்கள் என்றால் அந்தப் பயணியின் குறைந்தபட்ச வயது 5 ஆக இருக்க வேண்டும். மேலும் அந்த டிக்கெட் அடுத்த நாளிலிருந்து செல்லுபடியாகும். புதிய விதிமுறையின்படி, பதிவுசெய்யப்பட்ட பயனர் ஒருவர் தனக்கு மட்டுமல்லாமல், அதிகபட்சம் 5 பயணிகளுக்குச் சீசன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

ரயில் பயணிகள் செல்லுபடியாகும் சீசன் டிக்கெட், அடையாள அட்டை மற்றும் தெளிவான QR குறியீடு (மொபைலில் அல்லது அச்சிடப்பட்ட வடிவில்) ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும். தெளிவான QR குறியீடு மற்றும் செல்லுபடியாகும் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வது சிக்கல்களை ஏற்படுத்தலாம். குறிப்பிட்ட இரண்டு நிலையங்களுக்கு இடையே தினமும் அல்லது அடிக்கடி பயணம் செய்யும் பயணிகளுக்குச் சீசன் டிக்கெட்டுகள் மிகவும் சிக்கனமானவை ஆகும். இது பயணிகளை அந்த இரண்டு நிலையங்களுக்கு இடையே பலமுறை பயணம் செய்ய அனுமதிக்கிறது. பொதுவாக, இந்த வசதி இரண்டாம் வகுப்புப் பயணத்திற்கு (second class) கிடைக்கிறது. இது தினமும் பயணம் செய்பவர்களின் செலவை பெருமளவு குறைக்கிறது.

பண்டிகைக் காலங்களில் ரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கிறது. இந்த சமயத்தில் குடும்ப உறுப்பினர்கள் பலருக்கு டிக்கெட் புக்கிங் செய்வது சவாலானதாக இருக்கலாம். இந்நிலையில், RailOne செயலியின் இந்த அம்சம் பயணிகளுடன் செல்லும் மற்றவர்களுக்கும் ஒரே இடத்திலிருந்து சீசன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரயில் டிக்கெட் மற்றும் ரயில்வே தொடர்பான இதுபோன்ற விதிமுறைகள் மற்றும் அப்டேட்கள் குறித்து ரயில் பயணிகள் முன்கூட்டியே தெரிந்துகொண்டால் வீண் சிரமங்களைத் தவிர்ப்பதோடு ரயில்வே வசதிகளையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Source: Read Full Article