Quarterly Exam Holiday : மாணவர்களே ரெடியா? நாளை காலாண்டு தேர்வு… அடுத்து இத்தனை நாள் தொடர் விடுமுறையா.? இதோ சூப்பர் தகவல்

Quarterly Exam Holiday : மாணவர்களே ரெடியா? நாளை காலாண்டு தேர்வு… அடுத்து இத்தனை நாள் தொடர் விடுமுறையா.? இதோ சூப்பர் தகவல்
News Image

காலாண்டு தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள்

கல்வி தான் மாணவர்களின் வாழ்க்கையின் முக்கிய அடித்தளமாக விளங்கும், அந்த வகையில் பள்ளி மாணவர்களுக்கான நடப்பு கல்வியாண்டின் முதல் அடியை மாணவர்கள் நாளை எடுத்து வைக்கவுள்ளனர். காலாண்டுத் தேர்வுகள் நாளை முதல் தொடங்குகின்றன. தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இந்தத் தேர்வில் பங்கேற்க உள்ளனர். இதனையடுத்து தேர்விற்கான நடவடிக்கைகள்  பள்ளி நிர்வாகங்கள் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் 1 மற்றும் 2-ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 17-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறவுள்ளது.

நாளை முதல் தேர்வு தொடக்கம்

3ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை செப்டம்பர் 16-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும். 11, 12-ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 16-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் நாட்களில் மாணவர்கள் நேரத்திற்கு பள்ளிக்கு வர வேண்டும் என்றும், தேவையான எழுதுபொருட்களை கொண்டு வர வேண்டும் என்றும் பள்ளி நிர்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளன. மேலும் தேர்வில் மாணவர்கள் எந்தவித பதற்றமும் இன்றி தன்னம்பிக்கையுடன் பங்கேற்க வேண்டும் என்றும், பெற்றோர்கள் மாணவர்களுக்கு தேவையான ஆதரவை வழங்க வேண்டும் என்றும் ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். காலாண்டுத் தேர்வு நிறைவடைந்ததும் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை வழங்கப்பட உள்ளது.

காலாண்டு விடுமுறை எப்போது.?

அந்த வகையில், தேர்வுக்குப் பிறகு செப்டம்பர் 25-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை காலாண்டு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. 9 நாட்கள் மாணவர்களுக்கு தொடர் விடுமுறை கிடைக்கவுள்ளதால் மாணவர்கள் குஷியில் உள்ளனர். அதே நேரம் மாணவர்கள் உறவினர்கள் வீட்டிற்கும், சுற்றுலாவிற்கும் செல்ல தயாராக உள்ள நிலையில்,  இதே போல அடுத்த கல்விப் பருவத்திற்கான பாடங்களைத் தயார்படுத்திக்கொள்ளவும் மாணவர்களுக்கு இந்த விடுமுறை ஒரு  வாய்ப்பாக கிடைக்கும். விடுமுறை முடிவடைந்த பிறகு பள்ளிகள் மீண்டும் அக்டோபர் 5 ஆம் தேதி திறக்கப்பட்டு, வழக்கமான வகுப்புகள் தொடங்கவுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks